செய்திகள்

தக் லைஃப்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் இந்த தேதியில் தான்!

தக் லைஃப் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சிம்பு, கமல்ஹாசனுக்கு மகனாக நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் திரிஷா, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், நாசர், அபிராமி, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஆக்ஷன் கலந்த கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் புதுடெல்லி, புதுச்சேரி, ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தது படத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படமானது இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அப்படி இல்லை என்றால் அடுத்த ஆண்டு பொங்கல் அல்லது கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி தக் லைஃப் படத்தின் டிரைலர் வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி