திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.தமிழகத்தில் இன்று திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 2 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், இராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய 6 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள்; நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் 24ம் தேதி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையில் ஒருசில பகுதிகளில் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Video thumbnail
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தடுக்கும் வகையில் இந்துத்துவா கும்பல்
02:01
Video thumbnail
மகனின் பிறந்தநாளை நடுரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தொழிலதிபர்..
00:53
Video thumbnail
ராகுல் காந்தியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
00:19
Video thumbnail
"தோனி CAPTAINCY ரொம்ப பிடிக்கும்" மனம் திறந்த முதல்வர்
00:48
Video thumbnail
நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர். கிரிக்கெட்டில் பைத்தியமாக இருந்திருக்கிறேன்
01:15
Video thumbnail
ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன?
01:31
Video thumbnail
தினமலர் ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையா? கடுப்பான ரங்கராஜ் பாண்டே | ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன? | RSS | BJP
13:02
Video thumbnail
“சினிமாவில் மின்னும் எல்லா நட்சத்திரமும் உதயசூரியன் ஆக முடியாது” – அமைச்சர் கோவி.செழியன்
02:05
Video thumbnail
அம்பத்தூரில் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கிய அமைச்சர் சேகர்பாபு
01:00
Video thumbnail
SIR-க்கு எதிராக தமிழ்நாட்டில் முதன் முதலில் கண்டனம் அறிக்கையை அறிவித்தது தவெக தான் | RajMohan | TVK
04:56
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img