செய்திகள்

திருவள்ளூர் : பிரிந்து சென்ற காதலி ஆத்திரத்தில் இளைஞா் செய்த செயல்.

திருவள்ளூர் அருகே காதலித்து பிரிந்து சென்ற ஆத்திரத்தில் இளம் பெண்ணை கத்தியால் குத்தி தலைமறைவாக இருந்த வந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு கிலாய் பகுதியை சேர்ந்தவர் விஜயராணி ( வயது 24). என்பவர் ஊழியராக வேலை செய்து வருகிறார்.  இவர் திருவள்ளூர் அடுத்த பண்ணூர் கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி தினந்தோறும் வேலைக்குச் சென்று வருகிறார்.  இந்த நிலையில் விஜயரணி திருவள்ளூர் அடுத்த கீழ் நல்லாத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்யும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துபெருமாள் ( வயது 24) என்பவரை காதலித்து வந்துள்ளார்.  இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஒரு மாத காலமாக பிரிந்து உள்ளனர்.

நேற்று முன்தினம் விஜயராணி  பண்ணூர் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த முத்து பெருமாள் அவரை தகாத வார்த்தையால் பேசி தான் வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.  இதில் காயமடைந்த விஜய ராணியை அவரது  வீட்டில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம்  குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.  தலைமறைவாக  இருந்த முத்து பெருமாளை  மப்பேடு போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி   சிறையில் அடைத்தனர்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி