செய்திகள்

திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு இல்லை – அமைச்சா் ரகுபதி

திராவிடம் என்பது தமிழ் மண்ணில் இருந்து அகற்றப்பட முடியாத ஒன்று. அந்த சொல் வந்ததற்கு பிறகு  எது வேண்டுமானாலும் வரட்டும் பிரச்சனை இல்லை.  நாங்களும் தமிழ்நாடு என்றுதான் சொல்கின்றோம். தமிழர்களின் முன்னேற்றத்தை பற்றி தான் பேசுகின்றோம் திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு இல்லை.

 

புதுக்கோட்டை திருவப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் புதிய  மண்டபம் கட்டுமான பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி;  திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கைகள் தமிழ்நாடு மக்களிடமிருந்து அகற்ற முடியாது என்பதை விஜய் கட்சி வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும், எங்களுடைய கொள்கைகளை அதில் சில வெற்றிக்கு விளக்கங்களை கொடுத்திருக்கிறாரே தவிர திராவிட மடல் ஆட்சியையும் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுத்து செல்கின்ற கொள்கைகளையும் தமிழ்நாடு மக்களிடம் இருந்து எடுத்து விடவும் பிரித்து விடவும் முடியாது. உழைப்புக்கு எடுத்துக்காட்டு தமிழ்நாடு முதலமைச்சர் தான். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உலகத்திற்கே வழிகாட்டுகின்ற திட்டம். தமிழ்நாடு மக்களின் இதயங்களில் அவருக்கென்று தனி இடம் உள்ளது. உழைப்பின் மற்றொரு வடிவமாக திகழ்ந்து வருபவர் தான் துணை முதலமைச்சர். தமிழ்நாடு மக்களிடையே அவர் உழைப்புக்கும் மரியாதை உள்ளது. இரவு பகல் பாராமல் உழைக்கக் கூடிய ஒன்று அரசியல் அது போக போக தெரியும்.

 

இது வரைக்கும் பல அரசியல் கட்சிகளுடைய ஏ டீம் பி டீம் பார்த்துள்ளோம் இது பாஜகவுடைய C டீம், ஆளுநரை எதிர்த்து பேசினால் தான் தமிழ்நாட்டில்  எடுபடும். தமிழ்நாடு மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிற ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசினால் எடுபடாது. வெறுப்புக்கு ஆளாகியுள்ள ஆளுநரை பற்றி பேசினால் அவருக்கு மரியாதை கிடைக்கும் என்பதால் ஆளுநரை எதிர்த்து விஜய் மாநாட்டில் பேசப்பட்டுள்ளதே தவிர இது முழுக்க முழுக்க பாஜகவின் ஏ டீம் பி டீம் அல்ல பாஜகவின் சி டீம்.  அவர் யாருடைய ஏ டீம் பீ டீம் அல்ல என்று விஜய் கூறியுள்ளார் அவருக்கே தெரியும் அவர் சி டீம் என்று. ஆட்சிக்கு வரட்டும் அப்போது பாத்துக்கலாம் மக்களை சந்திக்க வேண்டும் 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த வேண்டும் மக்களை சந்திக்க வேண்டும் வாக்குகளை பெற வேண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வர வேண்டும் அதற்கு பிறகு தான் ஆட்சியில் பங்கு என்பதற்கெல்லாம் வாய்ப்பு. நிச்சயம் எங்களது கூட்டணியை யாரும் பிரித்து விட முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் காட்டுகின்ற பாசத்தை விட்டு யாரும் சென்று விட மாட்டார்கள்.

அதிமுக கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது விஜய்க்கு தெரிந்துள்ளது. அதிமுகவை அவர் கட்சியாகவே எடுத்துக் கொள்ளவில்லை, அங்கிருக்க தொண்டர்களை இழுக்க வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோள். பாஜகவுக்கு வலுவூட்டுகின்ற வகையில் அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இழுப்பதற்காக அதிமுகவைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை. ஊழலை பற்றி பேச வேண்டும் என்றால் 2011-21 பற்றி தான் பேச முடியுமே தவிர 21 26 ஐ பற்றி பேசுவதற்கு யாராலும் முடியாது எந்த தவறுக்கும் நாங்கள் ஆளாகவில்லை. பழுத்த பழம் தான் கல்லடி படும். திமுகவை பற்றி தாக்கி பேசினால் தான் மக்கள் மன்றத்தில் ஏதாவது பேச முடியும். தமிழ்நாட்டில் அரசியலில் அண்ணா பெரியார் கலைஞர் அதேபோல் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கக்கூடியவர் எங்களது தலைவர் மு க ஸ்டாலின். இதை மீறி யாரும் அரசியல் செய்ய முடியாது இவர்களைப் பற்றி பேசாமல் யாரும் அரசியல் செய்து விடவும் முடியாது.  எங்களுடைய இளைஞரணி மாநாட்டை பார்த்திருப்பீர்கள் அதற்கு வந்தவர்கள் முழுக்க முழுக்க இளைஞர்கள் தான். 1500 அடி நீளம் ஆயிரம் அடி அகலம் கொண்ட பந்தலில் நிரம்பி வழிந்து ஏறக்குறைய அன்றைய கணக்குப்படி 5 லட்சம் முதல் 7 லட்சம் நபர்கள் வந்துள்ளார்கள் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள் தான். இளைஞர்கள் திமுகவை நம்பி வந்து கொண்டிருக்கிறார்கள் எ இளைஞர்கள் இளம்பெண்கள் திமுகவின் கொள்கைகளை பரப்புவதற்காக சிறந்த பேச்சாளர்களாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் அவர்கள் மூலமாக அடுத்த கட்ட பிரச்சாரத்தை திமுக இளைஞரிடத்தில் கொண்டு செல்லும்.

திமுக நினைத்தால் 5 மடங்கு கூட்டத்தை கூட கூட்ட முடியும் எங்களின் இளைஞர் சக்தி அதிகரித்துள்ளது குறையவில்லை இன்று இளைஞர்கள் நம்பி வரும் இயக்கமாக திமுக தான் இருக்கிறது.  எங்களுக்கு சேர்ந்த கூட்டம் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்த கூட்டமே தவிர வேறு எதுவும் கிடையாது. முதல் காட்சி ஓட்டுவார்கள் அந்த காட்சியில் கிடைக்கும் பணத்தை வைத்து ஏதாவது செய்வார்கள். தற்போது அந்த சோவில் வந்த பணத்தை வைத்து இந்த கூட்டத்தை கூட்டி உள்ளனர். திராவிடம் என்பது தமிழ் மண்ணில் இருந்து அகற்றப்பட முடியாத ஒன்று அந்த சொல் வந்ததற்கு பிறகு பின்னாடி எது வேண்டுமானாலும் வரட்டும் பிரச்சனை இல்லை. நாங்களும் தமிழ்நாடு என்றுதான் சொல்கின்றோம். தமிழர்களின் முன்னேற்றத்தை பற்றி தான் பேசுகின்றோம் திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு இல்லை.  இந்தியாவிலேயே சிறுபான்மையினர் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது திமுக தான். அதற்காக நாங்கள் எவ்வளவு பழிவாங்கப்பட்டிருக்கின்றோம் என்பது நாடறிந்த உண்மை. ஒரு முறைக்கு இரண்டு முறை ஆட்சியை இழந்த கட்சி திமுக. எந்த கட்சியும் கொள்கைக்காக ஆட்சியை இழந்ததாக வரலாறு கிடையாது. கொள்கைக்காக இரு முறை ஆட்சியை இழந்தது திமுக என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். ஆட்சி அதிகாரம் அல்ல மக்கள் பணி தான் எங்களுக்கு முக்கியம் என்பது எடுத்துக்காட்டு.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி