சென்னையில் இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் தெரிவித்திருப்பதாவது; சாகச நிகழ்ச்சியை காண வருபவர்களின் வாகனங்களை நிறுத்த போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவான்மியூரிலிருந்து பாரிமுனை வரை காமராஜர் சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
பாஸ் வைத்துள்ளவர்கள் காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பாஸ் இல்லாதவர்கள் வாலாஜா சாலையில் வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சர்தார் படேல் சாலை- காந்தி மண்டபம் சாலை- அண்ணாசலை வழியாக செல்ல போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாரிமுனை- திருவான்மியூர் செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை- தேனாம்பேட்டை- காந்திமண்டபம் வழியாக செல்லலாம். வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் காலை 9.30 மணி வரை வாகனங்களை நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசலை தவிர்க்க மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில், பறக்கும் ரயிலை பயன்படுத்த காவல்துறை வேண்டுகோள் விடுத்தனர்.