சென்னை கொருக்குப்பேட்டையில் சிறுவர்கள் விட்ட ராக்கெட் சிக்னலுக்காக நின்று கொண்டு இருந்த புறநகர் ரயிலில் கடைசி பெட்டியில் விழுந்து வெடித்ததில் பயணிகள் அலறல்.
சென்னை கொருக்குப்பேட்டையில் சிறுவர்கள் விட்ட ராக்கெட் சிக்னலுக்காக நின்று கொண்டு இருந்த புறநகர் ரயிலில் கடைசி பெட்டியில் விழுந்து வெடித்ததில் பயணிகள் அலறல் சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லக்கூடிய மின்சார ரயில் சென்று கொண்டு இருந்தது அப்போது பேசின்பிரிட்ஜ் கொருக்குப்பேட்டை இடையே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த பொழுது பெஜவாட குடிசை பகுதியில் சிறுவர்கள் பட்டாசு வெடித்து கொண்டு இருந்தனர். சிறுவர்கள் ராக்கெட் பட்டாசு பற்ற வைத்த போது புறநகர் ரயிலில் கடைசி பெட்டியில் ராக்கெட் பட்டாசு உள்ளே சென்று வெடித்தது ரயில் பயணிகளின் உடைகளில் தீப்பொறி பட்டதில் பயணிகள் அலறினர். ராக்கெட் பட்டாசு ரயில் பெட்டியில் புகுந்ததை பார்த்த சிறுவர்கள் அங்கு இருந்த தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து ரயிலுக்கு சிக்னல் கிடைத்ததால் மீண்டும் ரயில் இயக்கப்பட்டது.