மதுபோதையில் பெண் காவலர் மீது மோதி விபத்து.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மதுபோதையில் பெண் காவலர் மீது மோதி விபத்து.பெண் காவலர் மீது மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய கார் ஷோரூம் மேலாளரை போலீசார் கைது செய்தனர். பெண் காவலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் லோகேஸ்வரி (23) என்பவர் அரும்பாக்கம் 100 அடி சாலையில் தேநீர் அருந்துவதற்காக இன்று காலை சென்றிருக்கிறார். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று பெண் காவலர் லோகேஸ்வரி மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெண் காவலர் லோகேஸ்வரியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு வலது கால் தொடை எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.

மேலும், அவர் அடையாரில் செயல்பட்டு வரும் மாருதி சுசுகி கார் ஷோரூம் மேலாளர் நந்தகுமார் (29) என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நந்தகுமாரை கைது செய்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சாலையில், நடந்து சென்ற, பெண் காவலர், மீது, மதுபோதை, மோதிய ஆசாமி.

 

Video thumbnail
இரண்டாவது இடதுக்கு தான், அதிமுக - தவெக இடையே போட்டி
01:14
Video thumbnail
இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் கட்சி திமுக
01:14
Video thumbnail
விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
01:07
Video thumbnail
2026 தமிழ்நாடு தேர்தல் மிக மிக முக்கியமானது | விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
16:39
Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:12
Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img