பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் நபர் யார்?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பிக் பாஸ் வீட்டிலிருந்து  இந்த வாரம் வெளியேறப் போகும்  நபர் யார்?விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனா். சீரியல்களை விட டிஆர்பி அதிகம் ஏறும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. அதற்கு அடையாளம் வெற்றிகரமாக நடந்து முடிந்த முதல் ஏழு சீசன்கள் தான். இந்த முதல் ஏழு சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

அதன் பிறகு தற்போது எட்டாவது சீசன் தொடங்கி இருக்கும் நிலையில் இதனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தான் இந்த சீசன் கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரஞ்சித், தீபக், ஜாக்லின், தர்ஷா குப்தா, ரவீந்தர் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டார்.

இரண்டாவது நாளே அவர் எலிமினேட் செய்யப்பட்டது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் நிகழ்ச்சியின் சுவாரசியத்தையும் அதிகப்படுத்தியது. அதன்படி மூன்று நாட்களுக்குள் ஏகப்பட்ட சண்டை நடந்து ஆண்கள் அணி இரண்டாகப் பிரிந்துள்ளது. இந்த நிலையில் நான்காவது நாள் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது.

அந்த வீடியோவில் ரவீந்தர் பிக் பாஸ் சீசன் 8-ல் இந்த வீட்டை விட்டு வெளியேறப் போவது யாரு என அறிக்கை ஒன்றை வாசிக்கிறார். அப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி அவர்கள் தான் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்று சொல்கிறார்கள். அதிலும் ரஞ்சித் பெயர் அடிபடுகிறது. ஆனால் ரஞ்சித்திற்கு ஓட்டுகள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் ரவீந்தர், ஜாக்லின், அருண் பிரசாத் போன்றோர் டேஞ்சர் சோனில் இருப்பதால் இவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் விவாதித்து வருகின்றனர்.

Video thumbnail
யார் இந்த ஆடிட்டர் குருமூர்த்தி? Auditor #gurumurthy
00:51
Video thumbnail
பாமகவில் நடப்பது அப்பா மகன் மோதலா? (அ) ஆரிய திராவிட மோதலா? ஆடிட்டர் குருமூர்த்தியின் அடுத்த திட்டம்
13:13
Video thumbnail
ராமதாஸூடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு | பாஜக கூட்டணியில் பாமக | Auditor Gurumurthy | PMK
09:16
Video thumbnail
பாஜக சொல்வதை எடப்பாடி செய்தே ஆகவேண்டும்
00:59
Video thumbnail
மாநிலங்களின் கட்சிகளை அழிப்பதே பாஜகவின் நோக்கம்
01:00
Video thumbnail
அன்புமணி பாமகவை பாஜகவில் இணைக்க முயற்சி
01:02
Video thumbnail
ராமதாஸ் - அன்புமணி மோதலால் பாமகவில் குழப்பம் | அன்புமணி பாமகவை பாஜகவில் இணைக்க முயற்சி | PMK | BJP
13:04
Video thumbnail
திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு
00:45
Video thumbnail
2026-ல் ஸ்டாலின் தான் முதலமைச்சர் - இந்தியா டுடே
00:50
Video thumbnail
திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு | 2026-ல் ஸ்டாலின் தான் முதலமைச்சர் - இந்தியா டுடே
11:33
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img