நடப்பு கல்வியாண்டில் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட பல கல்லூரிகளில் 500 பேராசிரியர்கள் அங்கீகாரம் பெறுவதற்காக பணியாற்றி வருவது அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது
கடந்தாண்டு 211 பேராசிரியர்கள் அங்கீகாரம் பெறுவதற்கு முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும் விவகாரம் நேற்று வெளியான நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் நடப்பு கல்வியாண்டில் 500 பேராசிரியர்கள் 124 கல்லூரிகளில் பணியாற்றுவது அம்பலம்.
அங்கீகாரம் பெறுவதற்கு ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றும் முறைகேடு நேற்று வெளியான நிலையில் தற்போது 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதை அண்ணா பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.
முறைகேடு குறித்து ஆய்வு செய்ய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் அண்ணா பல்கலைக்கழக உறுப்பினர் மற்றும் அரசு சார்பில் உறுப்பினர் என குழுவை அமைத்து ஒரு மாத காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க திட்டம்.
முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் இனி வாழ்நாள் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு மற்றும் உறுப்பு கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிவதை தடுக்கின்ற வகையில் அவர்கள் தகுதி நீக்கவும் செய்திட அண்ணா பல்கலைக்கழக முடிவு தவறு செய்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்திடவும் அண்ணா பல்கலைக்கழகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்