சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார்.இவர் நேற்று முன்தினம் இரவு ராயபுரம் மேற்கு மாதா கோவில் தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் குடிப்போதையில் மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களை மடக்கிப் பிடித்த உதவி ஆய்வாளர் செந்தில்குமாரிடம் சண்டை போட்டு அவரை கன்னத்தில் அடித்து விட்டு ஒருவர் தப்பி ஒட்டம் பிடித்துள்ளார்.
அதனையடுத்து இரண்டு பேரை மடக்கி அவர்களிடம் இருந்து செல்போனை வாங்கி தனது வாகனத்தில் வைத்து விட்டு விசாரணை செய்து கொண்டிருந்தபோது மற்றொருவரும் வாகனத்திலிருந்து செல்போனை எடுத்துக் கொண்டு தப்பி ஒடி இருக்கிறார்.
இதனையடுத்து சென்னை காசிமேட்டை சேர்ந்த 22 வயதுடைய முகிலனை போலீசார் காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.அவர் கொடுத்த தகவலின் பேரில் தப்பி ஓடி தலைமறைவாக இருந்த சென்னை காசிமேடு எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், காசிமேடு சிங்காரவேலன் நகர் பள்ளம் பகுதியைச் சேர்ந்த சரத் குமார் ஆகிய இருவரையும் இராயபுரம் போலீசார் கைதுசெய்து செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…