spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

முருகன் கோவில்களில் வைகாசி விசாக விழா

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

முருக பெருமானின் ஜென்ம நட்சத்திரத்தை குறிப்பிடும் வைகாசி விசாக திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் வசந்த விழாவாக கொண்டாடப்படும்.வைகாசி விசாகத்தை ஒட்டி முருகனின் அறுபடை வீடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முருகன் கோவில்கள்ளில் வைகாசி விசாக விழா

அந்த வகையில் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவடி  பால்குடம் சுமந்தும் அலகு குத்தியும்  நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு ஊர்களில் இருந்து பாத யாத்திரையாக வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தை ஒட்டி நள்ளிரவு ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாக்க வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடிய பிறகு காவடி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.காவடி பால்குடம் சுமந்தும் அலகு குத்தியும் முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மலையடிவாரத்தில் திரளும் பக்தர்கள் காவடி சுமந்து ஆடிப்பாடி கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர். வைகாசி விசாகத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருவதால் பழனி முருகன் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகர் கோவில்களிளும் இன்று சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் மேற்கொள்ளப்பட்டு  வைகாசி விசாகத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

Video thumbnail
காணாமல் போன 5 வயது சிறுமி.. சில நிமிடங்களில் மீட்ட RPF பெண் காவலர்..
00:38
Video thumbnail
ரூ.10 கூடுதலுக்கு வாக்குவாதம்.. டாஸ்மாக் பணியாளரை செருப்பால் அடித்த மதுப்பிரியர்..
00:52
Video thumbnail
தனது மேலாளர் ஜெகதீஷ் இல்ல விழாவில் கலந்துகொள்ள வந்த முதல்வர் விஜய்
00:31
Video thumbnail
"விஜய் 100% நல்லது செய்வார்!" - நடிகர் அர்ஜுன் நம்பிக்கை!
00:54
Video thumbnail
சனாதனம் குறித்த கேள்வி.. நடிகர் அர்ஜுன் சொன்ன விளக்கம்..
01:01
Video thumbnail
மாற்றம் வேண்டி மக்கள் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் - நடிகர் சிவக்குமார்
02:40
Video thumbnail
MLA-களின் பெயரை வைத்து மக்கள் வாக்களிக்கவில்லை; சின்னத்திற்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள்
00:58
Video thumbnail
டெல்லி பயணம் முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சர் விஜய் #Vijay #CMVijay #Delhi #Tamilnadu
01:40
Video thumbnail
நீங்க தூயசக்தியா விஜய்! பித்தலாட்ட சக்தி - டி.டி.வி.தினகரன்
02:26
Video thumbnail
ரீல்ஸ் மூலம் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு.. அமைச்சர் கீர்த்தனாவின் வீடியோ வைரல்..
00:57
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img