spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ராஜமௌலி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் இன்று (செப்டம்பர் 27) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தினை கொரட்டலா சிவா இயக்கியிருக்கிறார்.

இரண்டு பாகங்களாக உருவாகும் தேவரா முதல் பாகம் இன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சைஃப் அலிகான் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தினை நந்தமுரி தரகா ராமா ராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆக்சன் கலந்த கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தினை காண ரசிகர்கள் பலரும் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அதன்படி முதல் நாள் முதல் காட்சியை பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் ராஜமௌலி தனது குடும்பத்துடன் தேவரா படத்தினை காண ஐதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கிற்கு வந்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் ராஜமௌலி இயக்கியிருந்த ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
நடிகர் தனுஷுக்கு வெற்றி வேல் கொடுத்து உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்..
00:37
Video thumbnail
விஜய் வெற்றி பெறுவாரா?
01:11
Video thumbnail
மே 4-க்கு பிறகு தவெக தொண்டர்களின் மனநிலை..
01:29
Video thumbnail
தவெக அமைச்சரவை பட்டியல் வெளியீடு..
01:08
Video thumbnail
தவெக அமைச்சரவை பட்டியல் வெளியீடு | மே 4-க்கு பிறகு தவெக தொண்டர்களின் மனநிலை | TVK | Vijay | Election
13:32
Video thumbnail
திருமணம் முடிந்த கையோடு வந்து வாக்கு செலுத்திய புதுமண தம்பதி
01:15
Video thumbnail
சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஜனநாயக கடமையாற்றிய சூர்யா, ஜோதிகா
01:15
Video thumbnail
சென்னை வளசரவாக்கத்தில் தனது மனைவியுடன் வந்து வாக்களித்த நடிகர் யோகிபாபு
01:32
Video thumbnail
சென்னை நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார் விஜய்
01:00
Video thumbnail
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மிடில் ஸ்கூலில் வாக்களித்தார் நடிகை த்ரிஷா
01:11
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img