spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘கோட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

‘கோட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. யுவன் இதற்கு இசையமைத்திருந்தார். சித்தார்த்தா நுனி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார்.

படத்தில் நடிகர் விஜய் அப்பா- மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் அப்பா விஜய்க்கு ஜோடியாக சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரியும் நடித்திருந்தனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளன்று கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு வைரல்.

மேலும் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, மைக் மோகன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூலிலும் பட்டைய கிளப்பியது.அதன்படி இந்த படம் உலக அளவில் கிட்டத்தட்ட 430 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 3ஆம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படக்குழுவினர் ஏற்கனவே சொன்ன தகவலின் படி இதில் நீட்டிக்கப்பட்ட காட்சிகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Video thumbnail
"எந்தெந்த தொகுதி? எத்தனை தொகுதி என்பது எனக்கு தான் தெரியும்" -டிடிவி தினகரன்
01:43
Video thumbnail
கூட்டணி பா.ஜ.கவுடனா? த.வெ.கவுடனா? என்ற கேள்விக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில்
00:28
Video thumbnail
மீனவப் பெண்களுடன் கௌதமி | காசிமேடு பிரச்சாரம் பேசுபொருள் | MGR | ADMK | Gautami | Election 2026
01:04
Video thumbnail
சி.வி.சண்முகத்தின் அவதூறு பேச்சுக்கு நடிகர் விஷால் கண்டனம் #Vishal #CVShanmugam
02:52
Video thumbnail
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
01:47
Video thumbnail
கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது தாக்குதல் நடத்திய ஈரான்
00:45
Video thumbnail
"பெண்களுக்கான பாதுகாப்பை திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கொடுக்க முடியாது."-ரஞ்சனா நாச்சியார்
01:39
Video thumbnail
இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உ*ரிழப்பு
00:46
Video thumbnail
முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மு.வீரபாண்டி தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
01:21
Video thumbnail
தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலை தொடங்கினார் முதலமைச்சர்
00:33
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img