spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘கூலி’ படப்பிடிப்பில் சத்யராஜ் வைரலாகும் புகைப்படம்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

‘கூலி’ படப்பிடிப்பில் சத்யராஜ் வைரலாகும் புகைப்படம்!கூலி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம். இந்த படத்தினை கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் ரஜினி நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் வில்லனாக நடிகர் நாகார்ஜுனா நடித்து வருகிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது . அதேசமயம் படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாகிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்தது சென்னையில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சத்யராஜுடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
ஏற்கனவே நடிகர் சத்யராஜ் பல வருடங்கள் கழித்து நடிகர் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சத்யராஜுக்கு கூலி படத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்த எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.

அடுத்தது கூலி திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா #tvk
01:25
Video thumbnail
மக்களை ஏமாற்றிய விஜய்
01:06
Video thumbnail
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை தொடங்கினார்
01:24
Video thumbnail
"அம்மாவின் ஆசியோடு பரப்புரையை தொடங்குகிறேன்" - பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு
01:03
Video thumbnail
"இது நாடா, இல்ல காடா" - பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு | TVK I Vijay | Perambur | TVK Campaign
09:00
Video thumbnail
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்
01:35
Video thumbnail
பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தவெக தலைவர் விஜய்
00:26
Video thumbnail
நான் இன்னைக்கே வந்துட்டேன் - ஜூலி சவால் #Biggbossjulie #vijay #tvk
00:32
Video thumbnail
வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு| திமுக & அதிமுக 2 கட்சிகளுக்கும் இடையில் உள்ள பெரிய வேறுபாடு DMK ADMK
13:57
Video thumbnail
"விசில் பட்டனை அழுத்துங்க" | Gen Z நண்பர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் | TVK Vijay | தவெக |Election
19:45
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img