இறுதி கட்டத்தில் விஷ்ணு விஷாலின் – ‘ஆர்யன்’

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இறுதி கட்டத்தில்  விஷ்ணு விஷாலின் -  ‘ஆர்யன்’!விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகும் ஆர்யன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் விஷ்ணு விஷால் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. கடைசியாக இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதே சமயம் விஷ்ணு விஷால், மோகன்தாஸ், ஓர் மாம்பழ சீசனில் போன்ற ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் பல முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆர்யன் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஆர்யன் திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாக படக்குழு வீடியோ ஒன்றினை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆர்யன் திரைப்படத்தை விஷ்ணு விஷால் தயாரிக்க பிரவீன் இயக்கி வருகிறார். சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். ராட்சசன் படத்திற்கு பிறகு இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
அதிமுக கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றுதான்
00:57
Video thumbnail
திருமாவளவன் பிறந்த நாள் | ராப் இசைப் பாடகர் வேடனுக்கு அழைப்பு
01:01
Video thumbnail
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பாஜகவின் உட்பிரிவாக மாறிவிட்டது
00:56
Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img