spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பிரம்மாண்ட பாடல் காட்சியுடன் இன்று தொடங்கும் ‘தளபதி 69’ ஷூட்டிங்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பிரம்மாண்ட பாடல் காட்சியுடன் இன்று தொடங்கும் ‘தளபதி 69’ ஷூட்டிங்!தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு இன்று பிரம்மாண்ட பாடல் காட்சியுடன் தொடங்குகிறது. கோட் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தனது 69 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள விஜயின் கடைசி படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதன்படி தளபதி 69 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் தொடர்பான அறிவிப்பு போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

இந்த படத்தினை ஹெச். வினோத் இயக்க இருக்கும் நிலையில் கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், பிரியாமணி, நரேன், மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நேற்று (அக்டோபர் 4) இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 5) இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதாவது பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்குவதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த பாடலுக்கு சேகர் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். சேகர் மாஸ்டர் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் மட்ட பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு.. CCTV காட்சி வெளியீடு!
00:33
Video thumbnail
அம்பத்தூரில் நிரந்தர பணி கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்..
02:26
Video thumbnail
"எங்க ஆபீஸ்க்கு ஏற்கெனவே ஆர்டர் பண்ண ஷோபா தான் வந்தது"
02:13
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் செய்த சாதனை
01:08
Video thumbnail
'கருப்பு' ரிலீஸ் குறித்து கண்கலங்கியபடி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
01:37
Video thumbnail
54 ஆண்டுகால கட்சிக்கு வந்த சோதனை
01:10
Video thumbnail
முகத்தை மூடிக்கொண்டு வந்தது யார்? -எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
01:16
Video thumbnail
"ஜோசியரை பர்சனலாக வைத்துக்கொள்ளுங்கள்" - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்
01:38
Video thumbnail
ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
01:35
Video thumbnail
முதலமைச்சர் விஜய்க்கு சௌமியா அன்புமணி வாழ்த்து..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img