spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

அண்ணன் சொடக்கு போட்டா சம்பவம்தான்’ ரிலீஸுக்கு முன்னரே வேட்டையை தொடங்கிய ‘வேட்டையன்’!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அண்ணன் சொடக்கு போட்டா சம்பவம்தான்’ ரிலீஸுக்கு முன்னரே வேட்டையை தொடங்கிய ‘வேட்டையன்’!
நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வேட்டையன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரஜினியின் 170 வது படமாகும். இதனை ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான டிஜே ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது.

அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

அதற்கான மொழி ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் டீசரும் அதை தொடர்ந்து வெளியான ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து மனசிலாயோ எனும் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. அதாவது இந்த பாடல் ஏஐ மூலம் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் பாடியிருப்பது போன்று அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் யுகேந்திரன் வாசுதேவன், அனிருத், தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இந்த பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் இந்த பாடல் யூட்யூபில் 50 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. எனவே இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள “அண்ணன் சொடக்கு போட்டா சம்பவம்தான்” என்ற வரிகளைப் போல் ரிலீஸுக்கு முன்னரே வேட்டையன் படம் வேட்டையாடத் தொடங்கிவிட்டது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img