spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மனித வளத்தை அறிவு வளமாக மாற்ற சமச்சீர் கல்வியை கொண்டு வந்த திமுக அரசு – தயாநிதி மாறன் எம்.பி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மனித வளத்தை அறிவு வளமாக மாற்ற சமச்சீர் கல்வியை கொண்டு வந்த  திமுக அரசு – தயாநிதி மாறன் எம்.பி.மனித வளத்தை அறிவு வளமாக மாற்ற சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது திமுக அரசு -விருதுநகரில் தயாநிதி மாறன் எம்.பி பேச்சு.

விருதுநகரில் இன்று காலை நடைபெற்ற திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் தென் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாடாளுமன்ற குழு துணைத்தலைவரும் எம்.பியுமான திரு. தயாநிதிமாறன் “இந்தியாவில் பெரிய அளவில்,பெட்ரோல், நிலக்கரி மற்றும் தங்கம் போன்ற வளங்கள் கிடையாது, ஆனால் மனித வளம் அதிகமாக உள்ளது. இந்த மனித வளத்தை அறிவு வளமாக மாற்ற சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது திமுக அரசு என்றார்.

விருதுநகர், தனியார் திருமண மண்டபத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் தென்மண்டல அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட அமைப்பாளர் ராஜகுரு தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ரமேஷ் முன்னிலை வகித்தார்.

இதில்,நாடாளுமன்ற குழு துணைத்தலைவரும் எம்.பியுமான திரு.தயாநிதிமாறன் பங்கேற்று பேசினார்.
முன்னதாக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியனை தயாநிதி மாறன் பார்வையிட்டார். பின்னர் பெரியார்,அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திரு.தயாநிதி மாறன் கூறியது:
இந்தியாவில் பெறும் அளவில் பெட்ரோல் மற்றும் நிலக்கரி வளங்கள் இல்லை ,ஆனால் மனித வளம் அதிகமாக உள்ளது.இந்த மனித வளத்தை அறிவு வளமாக மாற்ற சமச்சீர் கல்வி கொள்கையை கொண்டு வந்தது திமுக அரசு என்றும் பெண் கல்வியை ஊக்கப்படுத்தியதோடு,பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியை அதிகம் தமிழகத்திற்கு கொண்டு வந்தது திமுக அரசு என்றார்.இடைநிற்றலே இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் காலை உணவு மற்றும் கல்வி உதவித்தொகையை வழங்கி வருவதாகவும், தமிழகத்தை நோக்கி அதிகம் தொழிற்சாலைகள் வருவதற்கு காரணம் படித்த இளைஞர்கள் அதிகம் இருப்பதால் தான் என்றார். புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வருவதன் நோக்கம் மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வருவதுதான் என்றார். திமுகவை வலுப்படுத்த சமூக ஊடகங்களை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்.

தேர்தல் நேரத்தில் சமூக ஊடகத்தில் பொய் பரப்புவார்கள். அது பொய் என்பதை நாம் கவனமாக இரண்டு நிமிடம் செலவழித்து நாம் எடுத்து சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில், அமைச்சர்கள்,தங்கம் தென்னரசு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் ,எம்பி ராணி ஸ்ரீகுமார், எம்எல்ஏக்கள் ஏ.ஆர். ஆர்.சீனிவாசன், தங்கப்பாண்டியன், சிவகாசி மேயர் சங்கீதா, மாநில துணைச்செயலாளர்கள் எஸ். ஆர்.பார்த்திபன், பைந்தமிழ்பாரி, கோபால்ராம். வாசிம்ராஜா, நிவேதாஜெஸிகா. கார்த்திக், கவுதமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Video thumbnail
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமானம் விபத்தில் காலமானார்
00:45
Video thumbnail
வாரத்தில் 5 நாட்கள் வேலை கோரி மத்திய அரசுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
01:55
Video thumbnail
ஏற்கனவே தோற்ற கூட்டணி | எத்தனை கெட்டப் போட்டு வந்தாலும் கெட் அவுட் தான்
01:43
Video thumbnail
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் எங்கள் தமிழ்நாடு தான்
01:49
Video thumbnail
பாஜக - அதிமுக கட்டாயத்தால் உருவான கூட்டணி; மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி
01:35
Video thumbnail
தூய்மை பணியாளரை காரில் அழைத்துச் சென்ற தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ்
00:55
Video thumbnail
மதுரை நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
01:08
Video thumbnail
77வது குடியரசு தினத்தில் 4 சிமெண்ட் மூடைகள்! Yoke–Farmers–Zerchers Walk சாதனை | குமரி மாவட்ட கண்ணன்
01:17
Video thumbnail
அம்பத்தூர்- மேனம்பேடு சாலையில் திடிரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்
00:58
Video thumbnail
77வது குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
01:11
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img