ஹைதராபாத் அருகே பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டாா்….!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

A woman, was ,murdered ,fire of> pouring ,petrol, near, Hyderabad., crimeஐதராபாத் அருகே மாந்திரீகம் பீதியில் கிராம மக்கள் பெண் ஒருவரை மூடநம்பிக்கையினால் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் கத்ரியாலா கிராமத்தை சேர்ந்த தியாகலா முத்தவா (45). இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். முத்தவா விவசாய வேலை செய்து கொண்டு கிராமத்தில் உள்ள எல்லோரிடமும் பேசி நெருக்கமாக இருந்துள்ளார்.

ஆனால் முத்தவா வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மாந்தீரிகம் செய்வதாக கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. முத்தவ்வா செய்யும் மாந்திரீகம் பூஜையினால் கிராமத்தில் உள்ளவர்களுக்கு உடல் நல பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக கிராம மக்கள் நம்பினர். இதனால் முத்தவ்வாவை கொல்லத் திட்டமிட்டு கிராமத்தை சேர்ந்த சிலர் வியாழக்கிழமை இரவு முத்தவ்வா வீட்டுக்குச் சென்றனர். வீட்டில் இருந்து முத்தவ்வா மாந்திரீகம் செய்வதாக சந்தேகமடைந்த மூடநம்பிக்கை கும்பல் கையுடன் கொண்டு சென்ற பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்தனர்.

தீப்பிழம்புகளால் எரிந்து கொண்டு அலறிய சத்தம் கேட்டதால் மகனும், மருமகளும் தாங்களும் தாக்கப்படுவோம் என்று பயந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். முத்தவ்வாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சிலர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் கிராம மக்கள் அவர்களை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயை அனைத்து முத்தவ்வாவை ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே முத்தவா உயிரிழந்தார்.

இதனால் உடல் ராமயம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. உதய்குமார் ரெட்டி, டிஎஸ்பி வெங்கட ரெட்டி, இன்ஸ்பெக்டர் வெங்கடராஜா கவுட் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.

முத்தவ்வா கணவர் பாலய்யா புகாரின்படி கிராமத்தை சேர்ந்த திகல ராமசாமி, முரளி, சேகர், லட்சுமி, ராஜ்யலதா, மகாலட்சுமி, போச்சம்மா ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
பாமகவில் நடப்பது அப்பா மகன் மோதலா? (அ) ஆரிய திராவிட மோதலா? ஆடிட்டர் குருமூர்த்தியின் அடுத்த திட்டம்
13:13
Video thumbnail
ராமதாஸூடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு | பாஜக கூட்டணியில் பாமக | Auditor Gurumurthy | PMK
09:16
Video thumbnail
பாஜக சொல்வதை எடப்பாடி செய்தே ஆகவேண்டும்
00:59
Video thumbnail
மாநிலங்களின் கட்சிகளை அழிப்பதே பாஜகவின் நோக்கம்
01:00
Video thumbnail
அன்புமணி பாமகவை பாஜகவில் இணைக்க முயற்சி
01:02
Video thumbnail
ராமதாஸ் - அன்புமணி மோதலால் பாமகவில் குழப்பம் | அன்புமணி பாமகவை பாஜகவில் இணைக்க முயற்சி | PMK | BJP
13:04
Video thumbnail
திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு
00:45
Video thumbnail
2026-ல் ஸ்டாலின் தான் முதலமைச்சர் - இந்தியா டுடே
00:50
Video thumbnail
திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு | 2026-ல் ஸ்டாலின் தான் முதலமைச்சர் - இந்தியா டுடே
11:33
Video thumbnail
2026 தேர்தல் திமுக கூட்டணி வியூகம்
00:49
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img