spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடிக்கும் புதிய படத்தின்  டைட்டில் டீசர் வெளியீடு!அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஹீரோவாக தொடர்ந்து பல படங்களை நடித்து வருகிறார். ஏற்கனவே அநீதி, ரசவாதி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ். அடுத்தது குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.

இந்த படத்தினை விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியிருக்கும் நிலையில் ஹேஷம் அப்துல் வாகப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ரொமான்டிக் காதல் கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசரை பட குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ஒன்ஸ் மோர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் இந்த படம் 2025 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Video thumbnail
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்தது..
00:47
Video thumbnail
மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்; நல்வாய்ப்பாக மூன்று பேர் உயிர்தப்பினர்.
00:17
Video thumbnail
தாய்க்காக மகன் கட்டிய தாஜ் மஹால்.. ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
00:40
Video thumbnail
2 சிறுநீரகங்கள் தானம் | உடல் உறுப்பு கொடையாளிக்கு அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் இறுதி அஞ்சலி.
01:15
Video thumbnail
புலி வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா | மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் கோலாகலம்.
02:05
Video thumbnail
திருமணம் குறித்த மகள் திவ்யாவின் பேச்சுக்கு ஆதரவு குரல் கொடுத்த சத்யராஜ்
01:23
Video thumbnail
தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் - டிரோன் காட்சிகள்
01:12
Video thumbnail
நடிகர் தனுஷுக்கு வெற்றி வேல் கொடுத்து உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்..
00:37
Video thumbnail
விஜய் வெற்றி பெறுவாரா?
01:11
Video thumbnail
மே 4-க்கு பிறகு தவெக தொண்டர்களின் மனநிலை..
01:29
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img