spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி (48) திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி (48) திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார்!

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி (48) திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார்!

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி. இவர் நடிகர் முரளியின் சகோதரர் ஆவர். திரைப்பட கல்லூரியில் படித்த இவர் நடிகை ராதிகா நடித்த சித்தி, அலைகள் ஆகிய நாடகங்களில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பின்னர் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் நடித்த இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த காக்க காக்க படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்திருந்தார். மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் என்ற வில்லன் வேடத்தில் நடித்தார். அப்படம் இவருக்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்!

அதன்பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்த இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து பைரவா, வடசென்னை, பிகில் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

திருமணம் ஆகாத இவர் திருவான்மையூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடனடியாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன்

டேனியல் பாலாஜியின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த அவரது உடல் அவர் பிறந்து வளர்ந்த புரசைவாக்கம் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேனியல் பாலாஜியின் மரண செய்தியை அறிந்து நேரடியாக அவர் உடல் வைக்கப்பட்டிருந்த கொட்டிவாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் புரோமேட் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் திரைத்துறை பிரபலங்கள் குறிப்பாக தயாரிப்பாளர் கௌதம் வாசுதேவ் மேனன், அமீர், வெற்றிமாறன், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் போன்ற திரை பிரபலங்களும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர்.

சூர்யா நடித்த காக்க காக்க படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்திருந்தார்

டேனியல் பாலாஜியின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களிலும் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டு வருகின்றனர்.

மறைந்த டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு அஞ்சலிக்காக சென்னை புரசைவாக்கம் வரதம்மல் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று மாலை அவரது உடல் ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு மின் மயானத்தில் தகனம் செய்யபட உள்ளது.

Video thumbnail
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ.2,500 உயர்த்தி மாதம் ரூ.15,000 வழங்கப்படும் -அன்பில் மகேஸ்
02:03
Video thumbnail
பொங்கலுக்கு எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன? - அமைச்சரின் பதில்கள்
02:09
Video thumbnail
இதுக்கு மேல என்ன ஒரு மாற்றம் கொண்டு வரணும்.
01:54
Video thumbnail
குடும்பத்துடன் சங்கராந்தி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
01:00
Video thumbnail
ஜனநாயகன் சென்சார் போர்டு விவகாரம் | அதிமுக - பாஜக கூட்டணியில் விஜயை இணைக்க நெருக்கடி | Vijay | CBFC
07:58
Video thumbnail
புதுச்சேரியிலிருந்து பொள்ளாச்சி சென்ற பேருந்தில் தீவிபத்து
01:07
Video thumbnail
ஊக்கமும், உழைப்பும் இருந்தால் எந்த உயரத்துக்கும் செல்லலாம் -ஆட்சியர் சுப்புலட்சுமி பேச்சு..
02:06
Video thumbnail
பராசக்தி படம் எப்படி இருக்கு? இந்தி திணிப்பில் திமுகவின் பங்களிப்பு | Parasakthi | Sivakarthikeyan
08:41
Video thumbnail
பராசக்தி ரிலீஸ்.. பட்டாசு வெடித்து ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்.. களைகட்டிய திரையரங்கம்
01:43
Video thumbnail
பராசக்தி படம் பார்க்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி
00:54
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img