spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தள்ளிப்போகும் இளையராஜாவின் பயோபிக் படப்பிடிப்பு – தனுஷ் தான் காரணமா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

இசைஞானி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. 70 காலகட்டங்களில் இருந்து இன்று வரையிலும் இவருடைய தனித்துவமான இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இலர். அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா.

இந்த நிலையில் தான் இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்க திட்டமிடப்பட்டது. அதில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க இயக்குனர் அருண் மாதேஸ்வரன் படத்தினை இயக்க இருக்கிறார். நீரவ் ஷா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க உள்ளார். இந்த படத்தினை கனெக்ட் மீடியா நிறுவனம் இளையராஜாவுடன் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதன்படி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களும் இணையத்தில் தொடர்ந்து பரவி வருகின்றன. அதாவது இளையராஜாவின் பயோபிக் படமாக உருவாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் படம் தொடங்குவதற்கான வேலைகளும் ஆரம்பித்து விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் படப்பிடிப்பு தொடங்குவது குறித்து எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.இந்நிலையில் ரசிகர்கள் பலருக்கும் இளையராஜாவின் பயோபிக் படம் மீண்டும் தள்ளிப்போகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் நடிகர் தனுஷ் குபேரா, இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருவதோடு படம் இயக்குவதிலும் பிசியாக இருக்கிறார். எனவே இளையராஜாவின் பயோபிக் படம் தள்ளிப் போக வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தள்ளிப்போகும் இளையராஜாவின்  பயோபிக் படப்பிடிப்பு  - தனுஷ் தான் காரணமா?

Video thumbnail
மனைவியை கொடுமை படுத்திய விஜய் | விஜய்க்கு எதிராக திரும்பிய ரசிகர்கள் | TVK Vijay | Sangeetha |Trisha
08:53
Video thumbnail
"குணத்தை இழந்தா எல்லாமே போச்சு" வைரலாகும் விஜயின் அட்வைஸ்.. Vijay
00:38
Video thumbnail
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்
01:04
Video thumbnail
Bro.. பணத்தை கொடுக்குறது மட்டும் மக்கள் பணி கிடையாது.. - திவ்யா சத்யராஜ் Vijay Divyasathyaraj
01:08
Video thumbnail
சென்னை திருவான்மியூரில் நடந்த திருமண விழாவில் விஜய்-திரிஷா ஜோடியாக பங்கேற்பு
01:02
Video thumbnail
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தம்பிதுரை மனு தாக்கல் செய்தார்
01:24
Video thumbnail
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாமக தலைவர் அன்புமணி மனு தாக்கல் செய்தார்
01:14
Video thumbnail
இந்தியாவிலேயே பெண்களின் உயர்கல்வி சேர்க்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்..
01:36
Video thumbnail
நேற்று நான் காரில் ஏறும்போது கொடுத்த ஆக்ஷன், தற்செயலாக செய்தது அது இன்றைக்கு வைரலாகிவிட்டது
00:55
Video thumbnail
"VIROSH" திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் அல்லு அர்ஜுன்
00:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img