spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு வரும் – அப்டேட் செய்த அனிருத்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 ‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு வரும் - அப்டேட் செய்த  அனிருத்!தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அஜித்தின் அடுத்த படம் இதுவரை வெளியாகவில்லை என ரசிகர்கள் பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் தான் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது.

ஆனால் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு ஒவ்வொரு போஸ்டர்களிலும் குறிப்பிட்டு வருகிறது. ஆகையினால் இரண்டு படங்களுமே ஒரே நாளில் அதாவது பொங்கலுக்கு வெளியாகுமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் இடையில் இருந்து வந்தது.

ஆனால் தற்போது விடாமுயற்சி படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என கூறி படம் தொடர்பான அப்டேட்டை கொடுத்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனம் இந்த படம் தயாராகின்றது. ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படப்பிடிப்புகளும் ஏறத்தாழ நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img