spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தனுஷ் நடிப்பில் ‘குபேரா’ ரிலீஸ் அப்டேட்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தனுஷ் நடிப்பில் ‘குபேரா’ ரிலீஸ் அப்டேட்!
தனுஷ் நடிப்பில் உருவாகும் குபேரா படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே அவர் பவர் பாண்டி, ராயன் ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட தனுஷ், அடுத்தது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இட்லி கடை எனும் திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இதற்கிடையில் இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார்.

அதன்படி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது.ஏறத்தாழ இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு திரையிடப்பட படக் குழுவினரால் திட்டமிடப்பட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் சாமி தரிசனம்
01:01
Video thumbnail
விஜய்யுடன் என்னை ஒப்பிடாதீர்கள்.. நான் அரசியலில் அனுபவம் பெற்றவன்.. - சரத்குமார்
01:25
Video thumbnail
பெரம்பலூர் அருகே மணல் சரிவு விபத்து – 50 வயது கூலி தொழிலாளி உயிரிழப்பு
00:50
Video thumbnail
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விமானம் விபத்தில் காலமானார்
00:45
Video thumbnail
வாரத்தில் 5 நாட்கள் வேலை கோரி மத்திய அரசுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
01:55
Video thumbnail
ஏற்கனவே தோற்ற கூட்டணி | எத்தனை கெட்டப் போட்டு வந்தாலும் கெட் அவுட் தான்
01:43
Video thumbnail
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் எங்கள் தமிழ்நாடு தான்
01:49
Video thumbnail
பாஜக - அதிமுக கட்டாயத்தால் உருவான கூட்டணி; மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி
01:35
Video thumbnail
தூய்மை பணியாளரை காரில் அழைத்துச் சென்ற தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ்
00:55
Video thumbnail
மதுரை நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
01:08
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img