spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ஆவடி மாநகராட்சியின் அவலநிலை மாறுமா? அதிகாரவர்க்கம் வேலை வாங்குவதற்கு தயாராக இருக்கிறது; வேலை செய்வதற்கு ஒருவரும் இல்லை.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஆவடி மாநகராட்சியின் அவலநிலை மாறுமா? அதிகாரவர்க்கம் வேலை வாங்குவதற்கு தயாராக இருக்கிறது; வேலை செய்வதற்கு ஒருவரும் இல்லை.ஆவடியில் வேலை வாங்குவதற்கு அமைச்சர், மேயர், ஆணையர், துணை ஆணையர்கள் என்று ஏராளமான அதிகார வர்க்கம் இருக்கிறது. ஆனால் களத்தில் வேலை செய்வதற்கு ஆள் இல்லை என்ற அவலநிலை நீடித்து வருகிறது. ஆவடி மாநகராட்சியில் வேலை வாங்குவதற்கு அமைச்சர் நாசர், ஆணையர் கந்தசாமி உள்ளிட்ட இன்னும் சில அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் வேலை செய்வதற்கு ஏ.ஈ (A.E) போன்ற அதிகாரிகள் இல்லாததால் மாநகராட்சி பணிகள் முடங்கிப் போய் இருக்கிறது.

48 வார்டுகளை கொண்ட ஆவடி மாநகராட்சியில் 12 வார்டுகள் ஒரு மண்டலம் என 4 மண்டலங்களாக பிரித்துள்ளனர். நான்கு மண்டலத்திற்கும் மண்டல அலுவலகமோ, மண்டல தலைவருக்கான அலுவலகமோ எதுவும் கிடையாது. பெயருக்கு மண்டல தலைவர்கள் இருக்கிறார்கள். ஆவடி மாநகராட்சியில் ஒரு ஆணையர், அதுவும் ஐஏஎஸ் அதிகாரி. அதற்கடுத்து துணை ஆணையர்கள் இரண்டு பேர், மாநகராட்சி நல அலுவலர் (City helth officer) மற்றும் மாநகராட்சி பொறியாளர் என்று அதிகாரிகள் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு கீழ் வேலை பார்ப்பதற்கு சுகாதாரத்துறை (Sanitary officer) மற்றும் அவர்களுக்கு கீழ் பணியாற்றக் கூடிய செக்சன் (Section) அலுவலர்கள் சுத்தமாக இல்லை. 48 வார்டுகளுக்கும் ஓரிரு அலுவலர்கள் மட்டுமே உள்ளனர்.

அதேபோன்று நகரமைப்பு பிரிவில் Section Head நகரமைப்பு அலுவலர் இல்லாமல் பொறுப்பு அதிகாரியை நியமித்துள்ளனர். அந்த துறையிலும் ஏராளமான ஆள் பற்றாக்குறை இருந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து ஆவடி மக்களின் அடிப்படை தேவைகள் சாலை அமைத்தல், கால்வாய் பணி, குடிநீர், கழிவுநீர் என்று மொத்தப் பணிகளையும் பார்க்க கூடிய பொறியியல் பிரிவில் (City Engineer section) அதிகாரி, அலுவலர் என்று பற்றாக்குறை ஏராளம்.

48 வார்டுகளுக்கு ஒரு ஏ.ஈ (Assistant Engineer) கூட இல்லை

ஆவடி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் சாலைப் பணி, கால்வாய் பணி, மெட்ரோ பணி என்று ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை பார்ப்பதற்கு நிறை குறை சொல்வதற்கு ஒரு ஏ.ஈ. (Assistant Engineer) கூட இல்லை. இருந்த இரண்டு உதவி பொறியாளர்களை (A.E) யும் இடம் மாறுதல் செய்துவிட்டார்கள். ஆவடி பொறியாளர் பிரிவில் மாநகராட்சி பொறியாளர், பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் டெக்னிக் நபர்கள் என்று அனைத்து பணிகளும் காலியாகவே இருக்கிறது.
அதனால் ஆவடி மாநகராட்சியில் குப்பை சுத்தம் செய்தல், கால்வாய் தூர்வாரும் பணி, பாதாளச்சாக்கடை திட்டம், குடிநீர் வழங்கல் என்று அனைத்து பணிகளும் முடங்கி போய் இருக்கிறது.

ஆவடியில் சாலை வேண்டும், மின் விளக்குகள் வேண்டும், குப்பைகளை அகற்றுங்கள் என்று அனைத்து வசதிகளையும் கேட்பதற்கு மக்கள் இருக்கிறார்கள். அதேபோன்று ஆவடியில் வேலை வாங்குவதற்கு, அதை செய், இதை செய் என்று உத்தரவிடுவதற்கு அமைச்சர் சா.மு.நாசர் இருக்கிறார், மேயர் உதயகுமார் இருக்கிறார், ஆணையர் கந்தசாமி இருக்கிறார், துணை ஆணையர்கள் இருக்கிறார்கள். இப்படி வேலை வாங்குவதற்கு அதிகார வர்க்கத்தினர் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் வேலை செய்வதற்கு ஒருவரும் இல்லை என்கிற பரிதாபமான நிலை இருந்து வருகிறது.

ஆவடி மக்கள் பாவம்

 

Video thumbnail
நான் எந்த அரசியல் கட்சியும் நடத்தவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
01:07
Video thumbnail
பாமக அவசர நிர்வாக குழு கூடவுள்ளது.. வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளோம் - அருள் பேட்டி
01:04
Video thumbnail
தமிழக மக்களின் நலனுக்காக மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைக்க முழு மனதோடு NDA கூட்டணியில் இணைந்துள்ளேன்
02:00
Video thumbnail
விழுப்புரம்: அரசு பேருந்து நடத்துனர் மீது மது போதையில் தாக்குதல்
00:37
Video thumbnail
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்
00:57
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்
00:36
Video thumbnail
"ஆளுநரின் செயல் வருத்தமளிக்கிறது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேச்சு
01:35
Video thumbnail
தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு
00:48
Video thumbnail
ஆந்திரா: பெண் காவலர் ஜெயாவுக்கு குவியும் பாராட்டு
00:46
Video thumbnail
ஜான்சியில் சுங்கச்சாவடியில் நின்றிருந்த கார்களை வேகமாக வந்து முட்டித் தள்ளிய லாரி
00:31
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img