spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘கடைசி உலகப் போர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

‘கடைசி உலகப் போர்’  படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் ஹிப் ஹாப் ஆதி நடித்திருந்த கடைசி உலகப் போர் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ஆரம்பத்தில் ஆல்பம் பாடல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஹிப் ஹாப் ஆதி. அடுத்தது இவர் அரண்மனை, ஆம்பள, தனி ஒருவன் போன்ற படங்களுக்கு இசையமைத்து பெயர் பெற்றார்.

அதேசமயம் நடிப்பதிலும் படம் இயக்குவதிலும் ஆர்வமுடைய இவர் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், பிடி சார் என பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இவர் ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் கீழ் கடைசி உலகப் போர் எனும் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தை இவர் தயாரித்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை இயக்கி, நடித்து, இசையமைத்திருந்தார்.

போர் தொடர்பான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹிப் ஹாப் ஆதி, கடைசி உலகப் போர் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறார் என புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Video thumbnail
தவெக ஆட்சியில் வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்..- தவெக தலைவர் விஜய்..
01:19
Video thumbnail
தவெக ஆட்சியில் வீட்டு வாசலுக்கே அரசின் நலத்திட்டங்கள் வந்து சேரும்.. - தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்
12:18
Video thumbnail
ஆவடியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? | மாஃபா பாண்டியராஜன் செய்த துரோகம் |Avadi | SM Nasar |Pandiarajan
13:50
Video thumbnail
ஜனநாயகன் லீக்.. உதயநிதி மீது பழி.. | Jana Nayagan | Vijay | Udhayanidhi Stalin
01:14
Video thumbnail
ஜனநாயகன் படம் லீக் செய்தது யார்? | Jana Nayagan | Leaked
01:17
Video thumbnail
ஜனநாயகன் படம் லீக் செய்தது யார்? உதயநிதி மீது பழி | Jana Nayagan Leaked | Vijay | TVK | DMK
10:48
Video thumbnail
விஜய் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
02:17
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பழனிசாமி பேசியது கண்டத்திற்குரியது; அநாகரீகம். - ஓபிஎஸ் விமர்சனம்
01:24
Video thumbnail
கேரளம் சட்டமன்றத் தேர்தல் : வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் நடிகர் மோகன்லால்!
01:01
Video thumbnail
கேரளம் சட்டமன்றத்தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய நடிகர் மம்முட்டி
01:01
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img