spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 3 பலி , லோடு ஆட்டோ – மினி லாரி நேருக்கு நேர் மோதல் .

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 3 பலி , லோடு ஆட்டோ – மினி லாரி நேருக்கு நேர் மோதல் .திருச்செந்தூர் அருகே லோடு ஆட்டோவும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதியதில் சிறுவன் உள்ளிட்ட 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள கீழச் செக்காரக்குடியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்துள்ளனர். பின்னர் அவர்கள் லோடு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

திருச்செந்தூர் அடுத்த கல்லாமொழி அனல்மின் நிலையம் அருகே சென்றபோது லோடு ஆட்டோ முன்னால் சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றபோது. லோடு ஆட்டோவும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சிறுவன் உட்பட 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள கீழச் செக்காரக்குடியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்துள்ளனர். பின்னர் அவர்கள் லோடு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

திருச்செந்தூர் அடுத்த கல்லாமொழி அனல்மின் நிலையம் அருகே லோடு ஆட்டோ வாகனங்களை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது,எதிர்பாராத விதமாக எதிரே வந்த மினி லாரி உடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் லோடு ஆட்டோ ஓட்டுநர் சுடலை வீரன், சிறுவன் வடிவேலு மற்றும் பெரும்படையான் உள்ளிட்ட 9 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்ட்டு பின்னர் படுகாயம் அடைந்த சுடலை வீரன், சிறுவன் வடிவேலு மற்றும் பெரும்படையான் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பெரும்படையான் (20), பெருமாள் (25) ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிறுவன் வடிவேலுவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் திருநெல்வேலியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்பாராத விதமாக எதிரே வந்த மினி லாரி உடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் லோடு ஆட்டோ ஓட்டுநர் சுடலை வீரன், சிறுவன் வடிவேலு மற்றும் பெரும்படையான் உள்ளிட்ட 9 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் படுகாயம் அடைந்த சுடலை வீரன், சிறுவன் வடிவேலு மற்றும் பெரும்படையான் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பெரும்படையான் (20), பெருமாள் (25) ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிறுவன் வடிவேலுவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் திருநெல்வேலியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Video thumbnail
இந்தியா கூட்டணியில் தவெக இடம்பெறுமா? | TVK | CM Vijay | INDIA Alliance | RahulGandhi | Congress
09:46
Video thumbnail
வாத்தி படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து பாரதிராஜாவுக்கு கென் கருணாஸ் அஞ்சலி..
00:49
Video thumbnail
அம்பத்தூர் டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு ₹10 கூடுதல் வசூல்?
00:38
Video thumbnail
முதல் மரியாதை-யெல்லாம் உலக சினிமா.. அந்த மாதிரியான படங்கள் இப்போது வரவில்லை - இயக்குநர் ஷங்கர்..
01:04
Video thumbnail
திரையுலகத்தை வாழ வைத்தவர் பாரதிராஜா.. இயக்குநர் பாரதிராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி
01:17
Video thumbnail
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு தமிழக முதல்வர் விஜய் வருகை..
01:06
Video thumbnail
நண்பரும், இயக்குநருமான பாரதிராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இசைஞானி இளையராஜா!
00:55
Video thumbnail
பாரதிராஜாவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
01:05
Video thumbnail
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு நடிகர்கள் சூர்யா, சிவகுமார் நேரில் அஞ்சலி
00:15
Video thumbnail
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்
00:15
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img