செய்திகள்

முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 3 பலி , லோடு ஆட்டோ – மினி லாரி நேருக்கு நேர் மோதல் .

திருச்செந்தூர் அருகே லோடு ஆட்டோவும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதியதில் சிறுவன் உள்ளிட்ட 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள கீழச் செக்காரக்குடியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்துள்ளனர். பின்னர் அவர்கள் லோடு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

திருச்செந்தூர் அடுத்த கல்லாமொழி அனல்மின் நிலையம் அருகே சென்றபோது லோடு ஆட்டோ முன்னால் சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றபோது. லோடு ஆட்டோவும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சிறுவன் உட்பட 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள கீழச் செக்காரக்குடியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்துள்ளனர். பின்னர் அவர்கள் லோடு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

திருச்செந்தூர் அடுத்த கல்லாமொழி அனல்மின் நிலையம் அருகே லோடு ஆட்டோ வாகனங்களை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது,எதிர்பாராத விதமாக எதிரே வந்த மினி லாரி உடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் லோடு ஆட்டோ ஓட்டுநர் சுடலை வீரன், சிறுவன் வடிவேலு மற்றும் பெரும்படையான் உள்ளிட்ட 9 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்ட்டு பின்னர் படுகாயம் அடைந்த சுடலை வீரன், சிறுவன் வடிவேலு மற்றும் பெரும்படையான் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பெரும்படையான் (20), பெருமாள் (25) ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிறுவன் வடிவேலுவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் திருநெல்வேலியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்பாராத விதமாக எதிரே வந்த மினி லாரி உடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் லோடு ஆட்டோ ஓட்டுநர் சுடலை வீரன், சிறுவன் வடிவேலு மற்றும் பெரும்படையான் உள்ளிட்ட 9 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் படுகாயம் அடைந்த சுடலை வீரன், சிறுவன் வடிவேலு மற்றும் பெரும்படையான் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பெரும்படையான் (20), பெருமாள் (25) ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிறுவன் வடிவேலுவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் திருநெல்வேலியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி