தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சோனா சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர், மதுரவாயல் கிருஷ்ணா நகர் 2-வது பிரதான சாலை, 28-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால் இவரது வீடு பெரும்பாலும் பூட்டியே இருக்கும். இதனை நோட்டம் விட்ட திருடர்கள் மாலை 4 மணியளவில் அவரது வீட்டின், சுற்று சுவர் ஏறிக் குதித்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டின் போர்டிகோவில் வைத்திருந்த ஏ.சி இயந்திரத்தின் வெளிப்புற யூனிட்டை திருட முயன்றுள்ளனர்.
அப்போது சோனா வளர்க்கும் நாய் அவர்களை பார்த்து தொடர்ந்து குறைத்துக் கொண்டே இருந்துள்ளது. இதனை கேட்டு சோனா வெளியே வந்து பார்த்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத கொள்ளையர்கள், அவர் கத்தி கூச்சலிட்டு விடக்கூடாது என்பதற்காக இரண்டு திருடர்களில் ஒருவர், கத்தி முனையில் சோனாவை மிரட்டி பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி உள்ளனர்.
இதுகுறித்து நடிகை சோனா தரப்பில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து மதுரவாயல் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்டமாக, சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதை அடிப்படையாக வைத்து தப்பிய திருடர்கள் குறித்து போலீஸார் துப்புத் துலக்கி வந்தனா். சோனா வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டிச் சென்ற சம்பவம் சினிமா வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மதுரவாயிலை சேர்ந்த லோகேஷ் மற்றும் சிவ ஆகிய இருவரை சிசிடிவி கேமரா உதவியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…