நடிகை சோனா வீட்டில் சுவர் ஏறி குதித்து கத்தியை காட்டி மிரட்டிய இருவா் கைது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நடிகை சோனா வீட்டில் சுவர் ஏறி குதித்து கத்தியை காட்டி மிரட்டிய இருவா் கைது.தமிழ் திரையுலகில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனா ஹைடன் (45). 2002-ல் ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்றுள்ள இவர் ‘குசேலன்’ படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானார். ‘குரு என் ஆளு’, ‘அழகர் மலை’, ‘ஒன்பதுல குரு’, ‘ஜித்தன் 2’ உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சோனா சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர், மதுரவாயல் கிருஷ்ணா நகர் 2-வது பிரதான சாலை, 28-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால் இவரது வீடு பெரும்பாலும் பூட்டியே இருக்கும். இதனை நோட்டம் விட்ட திருடர்கள் மாலை 4 மணியளவில் அவரது வீட்டின், சுற்று சுவர் ஏறிக் குதித்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டின் போர்டிகோவில் வைத்திருந்த ஏ.சி இயந்திரத்தின் வெளிப்புற யூனிட்டை திருட முயன்றுள்ளனர்.

அப்போது சோனா வளர்க்கும் நாய் அவர்களை பார்த்து தொடர்ந்து குறைத்துக் கொண்டே இருந்துள்ளது. இதனை கேட்டு சோனா வெளியே வந்து பார்த்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத கொள்ளையர்கள், அவர் கத்தி கூச்சலிட்டு விடக்கூடாது என்பதற்காக இரண்டு திருடர்களில் ஒருவர், கத்தி முனையில் சோனாவை மிரட்டி பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி உள்ளனர்.

இதுகுறித்து நடிகை சோனா தரப்பில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து மதுரவாயல் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்டமாக, சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதை அடிப்படையாக வைத்து தப்பிய திருடர்கள் குறித்து போலீஸார் துப்புத் துலக்கி வந்தனா். சோனா வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டிச் சென்ற சம்பவம் சினிமா வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மதுரவாயிலை சேர்ந்த லோகேஷ் மற்றும் சிவ ஆகிய இருவரை சிசிடிவி கேமரா உதவியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Video thumbnail
விழுந்து நொறுங்கிய விமானம் வெளியான வீடியோ காட்சி
00:33
Video thumbnail
ஆடிட்டர் குருமூர்த்தி செய்த வேலை
00:50
Video thumbnail
தமிழகத்திற்கு பாஜக தலைவர்கள் செய்த நன்மைகள் | ஆடிட்டர் குருமூர்த்தி செய்த வேலை | BJP | Gurumurthy
12:55
Video thumbnail
அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம்
00:21
Video thumbnail
அதிமுகவில் பிளவு ஏற்பட காரணமானவர் குருமூர்த்தி?
00:59
Video thumbnail
ராமதாஸ் ஒரு மாபெரும் போராளி #ramadoss
00:56
Video thumbnail
யார் இந்த ஆடிட்டர் குருமூர்த்தி? Auditor #gurumurthy
00:51
Video thumbnail
பாமகவில் நடப்பது அப்பா மகன் மோதலா? (அ) ஆரிய திராவிட மோதலா? ஆடிட்டர் குருமூர்த்தியின் அடுத்த திட்டம்
13:13
Video thumbnail
ராமதாஸூடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு | பாஜக கூட்டணியில் பாமக | Auditor Gurumurthy | PMK
09:16
Video thumbnail
பாஜக சொல்வதை எடப்பாடி செய்தே ஆகவேண்டும்
00:59
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img