spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’…. ரிலீஸ் தேதி அறிவிப்பு!விமல் நடிப்பில் உருவாகியுள்ள சார் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் விமல் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பசங்க திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும் இவர் களவாணி, தேசிங்கு ராஜா, கலகலப்பு போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றார்.

கடைசியாக இவரது நடிப்பில் போகுமிடம் வெகுதூரமில்லை எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் தேசிங்கு ராஜா 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் விமல். இதற்கிடையில் இவர் போஸ்ட் வெங்கட் இயக்கத்தில் சார் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு மா பொ சி என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் தலைப்பு சார் என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விமலுடன் இணைந்து சாயாதேவி கண்ணன், சரவணன், ரமா, சிராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் வெற்றிமாறனும் கிராஸ் ரூட் நிறுவனமும் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து படத்தினை தயாரித்துள்ளது. சித்து குமாரின் இசையிலும் இனியன் ஜெய் ஹரிஷின் ஒளிப்பதிவியிலும் இந்த படம் உருவாகி இருக்கிறது.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர், பாடல்கள், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
இந்தியா கூட்டணியில் தவெக இடம்பெறுமா? | TVK | CM Vijay | INDIA Alliance | RahulGandhi | Congress
09:46
Video thumbnail
வாத்தி படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து பாரதிராஜாவுக்கு கென் கருணாஸ் அஞ்சலி..
00:49
Video thumbnail
அம்பத்தூர் டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு ₹10 கூடுதல் வசூல்?
00:38
Video thumbnail
முதல் மரியாதை-யெல்லாம் உலக சினிமா.. அந்த மாதிரியான படங்கள் இப்போது வரவில்லை - இயக்குநர் ஷங்கர்..
01:04
Video thumbnail
திரையுலகத்தை வாழ வைத்தவர் பாரதிராஜா.. இயக்குநர் பாரதிராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி
01:17
Video thumbnail
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு தமிழக முதல்வர் விஜய் வருகை..
01:06
Video thumbnail
நண்பரும், இயக்குநருமான பாரதிராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இசைஞானி இளையராஜா!
00:55
Video thumbnail
பாரதிராஜாவின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
01:05
Video thumbnail
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு நடிகர்கள் சூர்யா, சிவகுமார் நேரில் அஞ்சலி
00:15
Video thumbnail
இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்
00:15
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img