அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் நான் அவரைப் போல யாரும் இருக்க முடியாது – துல்கர் சல்மான் பேச்சு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் நான் அவரைப் போல யாரும் இருக்க முடியாது - துல்கர் சல்மான் பேச்சு!   நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் தாம் என்றும் அவரைப் போல யாரும் இருக்க முடியாது என்றும் நடிகர் துல்கர் சல்மான் கூறியுள்ளார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லக்கி பாஸ்கர். இந்த படத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 31 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் “லக்கி பாஸ்கர்” திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி, சென்னை கதீட்ரல் சாலையிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் துல்கர் சல்மான், நடிகர் ராம்கி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ராம்கி, “படத்தின் சஸ்பென்ஸ் கருதி இயக்குனர் எண்னை ட்ரெய்லரில் காட்டவில்லை. நானும் துல்கர் சல்மானும் 40 நாட்களுக்கும் மேல் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறோம். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் துல்கர் சல்மான். ஒரு மொழியில் டப்பிங் பேசுவது என்பது சுலபம். மற்றும் மொழியில் அதை உணர்வை கொண்டு வந்து பேசுவது மிகவும் கடினம். கமல்ஹாசனைப் போல் துல்கர் சல்மானும் சிறப்பாக செயல்படுகிறார். மேலும் இந்த படம் எனக்கு புது அனுபவத்தை கொடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில், “லக்கி பாஸ்கர் படம் என்னுடைய ஸ்பெஷல். வாத்தி திரைப்படம் எப்படி சமூக கருத்தை முன்வைத்து எடுக்கப்பட்டதோ அதேபோல் லக்கி பாஸ்கர் கதையும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடித்தமான கதையாக இருக்கும். தமிழ் சினிமாவின் தீவிர ரசிகன் நான். அதிலும் குறிப்பாக ரஜினி நடித்த அண்ணாமலை திரைப்படம் மிகவும் பிடிக்கும். அவரது திரைப்படத்தைப் போலவே லக்கி பாஸ்கர் படத்தில் மாஸான காட்சிகள் அதிகமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

பல திருமணங்களை பதிவு செய்ய இஸ்லாமிய ஆண்களுக்கு உரிமை உண்டு: மும்பை உயர் நீதிமன்றம்.

நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், “படத்தில் வரும் பாஸ்கர் என்ற கதாபாத்திரம் அனைவரின் வாழ்க்கையிலும் பொருந்தும். நான்கு மொழியிலும் தயாராகி இருக்கும் லக்கி பாஸ்கர் படத்திற்கு டப்பிங் செய்ய 40 நாட்கள் ஆனது. அதாவது ஒவ்வொரு மொழிக்கும் 10 நாட்கள் என நான்கு மொழிக்கும் 4 நாட்கள் இருட்டில் அமர்ந்தபடியே பேசினோம்.

அதுவே நான்கு படங்களில் நடித்தது போன்ற அனுபவத்தை தந்துள்ளது. மேலும் டிரைலரில் வருவது என்னுடைய குரல் இல்லை. ஆனால் படம் வெளியாகும் போது என்னுடைய குரல் தான் இருக்கும்.

 

நான் ரசித்த நடிகர்களுடன் நடிப்பது என்னுடைய பாக்கியம். அப்படி நான் ரசித்த நடிகர்களில் ஒருவர்தான் ராம்கி. அவருடைய தலை முடிக்கு நான் மிகப்பெரிய ரசிகன்” என்றார். தொடர்ந்து லக்கி பாஸ்கர் என்று இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதை லக்கி என்று கூறுவீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த துல்கர் சல்மான், “என் வாழ்க்கையே லக்கி தான். நான் பிறந்த விடும் லக்கி தான்” என்றார். மேலும் பேசிய அவர், “என் அப்பா மம்மூட்டி, பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தில் நடித்திருப்பதை சுட்டிக்காட்டி அதைப்போலவே பாஸ்கர் என்ற பெயர் கொண்ட படத்தின் பெயரை கேட்டதும் எனக்கு பிடித்து விட்டது. நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரைப்போல யாரும் இருக்க முடியாது” என்று கூறியுள்ளார் துல்கர் சல்மான்.

Video thumbnail
பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு 9.69 சதவீதமாக உயர்வு
00:44
Video thumbnail
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் டிஜிட்டல் முறையில் பாடத்திட்டம்
00:37
Video thumbnail
தமிழே தெரியாதவர்களுக்கு தமிழ்நாட்டு அரசு பணியா?
00:55
Video thumbnail
திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகள் சாதனை! வேதனை!!
00:31
Video thumbnail
திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகள் சாதனை! வேதனை! | தொழிலாளர்களை கண்டுக்கொள்ளாத முதல்வர் | DMK | MK Stalin
14:34
Video thumbnail
தீவிரவாதிகளுக்கு ஆதரவான கட்சி திமுக - சங்கிகள் சதித்திட்டம்
00:51
Video thumbnail
மதுரை ஆதீனத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் கொ*ல முயற்சியா
00:39
Video thumbnail
வன்முறையை விதைக்கும் பாஜகவினர்
00:51
Video thumbnail
2026 தேர்தல் | கலவரத்தை தூண்ட சங்கிகள் திட்டம்
00:34
Video thumbnail
2026 தேர்தல் | கலவரத்தை தூண்ட சங்கிகள் திட்டம் | வசமாக சிக்கிய மதுரை ஆதினம் | Madurai Adheenam
13:51
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img