திரைப் பிரபலங்கள் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் இன்று (அக்டோபர் 10) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தினை காண ரசிகர்கள் பலரும் படையெடுத்து வருகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படம் ரிலீஸுக்கு முன்னரே பட்டைய கிளப்பியுள்ளது.
அதாவது இந்த படத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான மனசிலாயோ எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ரஜினியின் ஸ்டைலான நடனமும் மஞ்சு வாரியரின் எனர்ஜியான நடனமும் பார்ப்பவர்களையும் பாடலைக் கேட்பவர்களையும் தன்னை அறியாமல் ஆட்டம் போட வைக்கிறது.
சென்னையில் மலேசியா ஏர்லைன்ஸ் இன்ஜின் பழுது; 168 பயணிகள் தவிப்பு.
அந்த வகையில் இந்த பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த பாடலுக்கு ஏராளமானோர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில்தான் பிரபல நடிகர் அசோக் செல்வன், அவரது மனைவி கீர்த்தி பாண்டியன், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகை ரெஜினா ஆகியோர் மனசிலாயோ பாடலுக்கு லிஃப்ட்டினுள் ஜாலியாக நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.