spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சாம்சங் விவகாரத்தில் முதல்வரின் தலையீடு வேண்டும் – செல்வப் பெருந்தகை கோரிக்கை.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சாம்சங் விவகாரத்தில் முதல்வரின்  தலையீடு வேண்டும் – செல்வப் பெருந்தகை கோரிக்கை.தமது தொகுதியான ஶ்ரீபெரும்பதூரில் நடைபெற்று வரும் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில், தொழிலாளர்களுக்கு ஆதரவாகவே தாம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலத்தின் 127- வது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பெருந்தகை, சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு அரசும் தொழிற்சங்கங்களும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முடிவை எட்ட வேண்டும் என்றார்.

தொழிலாளர் நலனை பாதுகாத்து வரும் தமிழகஅரசு, முதலமைச்சர் இவ்விவகாரத்தை கனிவுடன் கையாண்டு, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

சாம்சங் தொழிலாளர் பிரச்சினையை தீர்க்கும் விதமாக, நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.
ஹரியானா தேர்தலில் பிஜேபியின் வெற்றி, கோல்மாலால் விளைந்தது என்று சொல்லப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.தேசிய தேர்தல் ஆணையம் மிகவும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மல்யுத்த வீராங்கனை வினோத் போக ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தொடர்பான கேள்விக்கு?
அந்த வீராங்கனையது வெற்றியை, தேசத்தின் வெற்றியாகவே பார்ப்பதாக செல்வப்பெருந்தகா தெரிவித்தார்.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img