சாதனை படைத்த மஞ்சும்மல் பாய்ஸ் குழு- நடிகர் ரஜினி வாழ்த்து
உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூலை குவித்த மஞ்சும்மல் பாய்ஸ் பட குழுவினரை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தினார்.
சிதம்பரம் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்தது.
தமிழில் எந்தப் படமும் போதிய வரவேற்ப்பை பெறாத நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் குணா படத்தை தொடர்பு படுத்தி உருவானதால் தமிழ்நாட்டில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது. படம் வெளியான போது தமிழில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், தனுஷ், சித்தார்த், விக்ரம், சிம்பு உள்ளிட்ட பலர் நேரில் அழைத்து படக்குழுவினரை வாழ்த்திய நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மஞ்சும்மல் பாய்ஸ் படக் குழுவினரை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார்.