‘நந்தன்’ படம் சூரிக்காக எழுதப்பட்டது…. உண்மையை உடைத்த சசிகுமார்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சசிகுமார் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் நந்தன். இந்த படத்தினை இரா. சரவணன் இயக்கி இருந்தார்

‘நந்தன்’ படம் சூரிக்காக எழுதப்பட்டது…. உண்மையை உடைத்த சசிகுமார்!இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருந்தது. ஜிப்ரான் இதற்கு இசையமைத்திருந்தார். சரண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து ஸ்ருதி பெரியசாமி, மாதேஷ் மிதுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

‘நந்தன்’ படம் சூரிக்காக எழுதப்பட்டது…. உண்மையை உடைத்த சசிகுமார்!

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. பலரும் இந்த படம் குறித்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நந்தன் படம் சூரிக்காக எழுதப்பட்டது என சசிகுமார் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

‘நந்தன்’ படம் சூரிக்காக எழுதப்பட்டது…. உண்மையை உடைத்த சசிகுமார்!
அவர் கூறியதாவது, “நந்தன் படத்தின் கதை எனக்காக எழுதப்பட்டது இல்லை. நடிகர் சூரிக்காக எழுதப்பட்டது. நடிகர் சூரி அப்போது விடுதலை படத்தில் பிசியாக இருந்ததால் நான் இந்தக் கதையில் நடிப்பதாயிற்று. ரயிலில் வழியனுப்ப வந்தவனை வழியனுப்பிய கதை மாதிரி இயக்குனர் என்னை நந்தன் எனும் ரயிலில் ஏற்றி வழியனுப்பி வைத்திருக்கிறார்” இன்று கலகலப்பாக கூறியுள்ளார்.

 

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “நல்ல வேளை இந்த படத்தை நான் மிஸ் பண்ணவில்லை. இந்த படத்தை தயாரிக்கலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த படத்தில் ஒப்பந்தமானதற்கு பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு தான் நடித்தேன். ஆனால் அந்த கஷ்டத்தையும் இஷ்டப்பட்டு தான் ஏற்றுக்கொண்டேன். நாடோடிகள் படத்தில் நான் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்கிற மாதிரி, அந்த வசனம் மொத்தமும் இரா. சரவணனுக்கு பொருந்தும்” என்று இயக்குனரை பாராட்டியுள்ளார் சசிகுமார்.

Video thumbnail
ராமதாஸூடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு | பாஜக கூட்டணியில் பாமக | Auditor Gurumurthy | PMK
09:16
Video thumbnail
பாஜக சொல்வதை எடப்பாடி செய்தே ஆகவேண்டும்
00:59
Video thumbnail
மாநிலங்களின் கட்சிகளை அழிப்பதே பாஜகவின் நோக்கம்
01:00
Video thumbnail
அன்புமணி பாமகவை பாஜகவில் இணைக்க முயற்சி
01:02
Video thumbnail
ராமதாஸ் - அன்புமணி மோதலால் பாமகவில் குழப்பம் | அன்புமணி பாமகவை பாஜகவில் இணைக்க முயற்சி | PMK | BJP
13:04
Video thumbnail
திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு
00:45
Video thumbnail
2026-ல் ஸ்டாலின் தான் முதலமைச்சர் - இந்தியா டுடே
00:50
Video thumbnail
திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு | 2026-ல் ஸ்டாலின் தான் முதலமைச்சர் - இந்தியா டுடே
11:33
Video thumbnail
2026 தேர்தல் திமுக கூட்டணி வியூகம்
00:49
Video thumbnail
திமுக கூட்டணி வியூகம் | பாமகவின் குழப்ப அரசியலுக்கு காரணம் யார்? | தடுமாறும் தவெக | DMK | PMK | TVK
09:00
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img