‘ராஜபுத்திரன்’ இளைய திலகம் பிரபு நடிக்கும் – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

‘ராஜபுத்திரன்’ இளைய திலகம் பிரபு நடிக்கும் - ஃபர்ஸ்ட் லுக்  வெளியீடு!
இளைய திலகம் பிரபு நடிப்பில் வெளியாகியுள்ள ராஜபுத்திரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் பிரபு ரசிகர்களால் இளைய திலகம் என்று கொண்டாடப்படுபவர் . இவர் 1980 காலகட்டங்களில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர்.

தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கவின், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரபு. மேலும் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் பிரபு, ராஜபுத்திரன் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது கதாநாயகனாக நடித்து வரும் வெற்றிக்கு தந்தையாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து கிருஷ்ண பிரியா, ஆர்வி உதயகுமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், தங்கதுரை, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

 

‘கோட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

இந்த படத்தினை கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை மகா கந்தன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆலிவர் டெனி இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஐஸ் நவ்பால் ராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார்.கிராமத்துக் கலைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாளான இன்று (அக்டோபர் 1) வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

 

Video thumbnail
பிஜேபி கூட்டணியால் திமுகவை வெற்றி பெற முடியுமா?
01:16
Video thumbnail
புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?
00:50
Video thumbnail
திமுகவை குறிவைக்கும் அமலாக்கத்துறை
01:29
Video thumbnail
2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் திட்டம்
00:44
Video thumbnail
SIR திருத்தம், இந்த மண்ணின் பூர்வ குடி மக்களின் குடியுரிமைகளை பறிக்கும் முயற்சி
01:14
Video thumbnail
SIR திருத்தம் இந்த மண்ணின் பூர்வ குடி மக்களின் குடியுரிமைகளை பறிக்கும் முயற்சி | வேல்முருகன் பேட்டி
06:46
Video thumbnail
இரண்டாவது இடதுக்கு தான், அதிமுக - தவெக இடையே போட்டி
01:14
Video thumbnail
இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் கட்சி திமுக
01:14
Video thumbnail
விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
01:07
Video thumbnail
2026 தமிழ்நாடு தேர்தல் மிக மிக முக்கியமானது | விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
16:39
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img