தொடங்கப்பட்டது ஸ்பெயினில் – ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தொடங்கப்பட்டது ஸ்பெயினில் -  ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு.தல, அல்டிமேட் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி படப்பிடிப்பு ஸ்பெயினில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தினை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் தயாரிப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது.

அதன்படி இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என்று செய்திகள் பரவி வருகிறது. மேலும் இவர்களுடன் இணைந்து சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.

அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஐதராபாத் பகுதியில் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. பாடல் காட்சிகள் உட்பட படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தன.அதன் பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு குட் பேட் அக்லி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமில்லாமல் ஸ்பெயினில், இரண்டு மாதங்கள் படபிடிப்புகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அங்கு ஆக்சன் காட்சிகளும் படமாக்கப்படும் எனவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

 

Video thumbnail
இரண்டாவது இடதுக்கு தான், அதிமுக - தவெக இடையே போட்டி
01:14
Video thumbnail
இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் கட்சி திமுக
01:14
Video thumbnail
விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
01:07
Video thumbnail
2026 தமிழ்நாடு தேர்தல் மிக மிக முக்கியமானது | விஜயுடன் இணையும் அண்ணாமலை, TTV, OPS, செங்கோட்டையன்
16:39
Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:12
Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img