சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. சூர்யாவின் 42 வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தினை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.
இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பாபி தியோல் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
மேலும் நடிகர் கார்த்தி இந்த படத்தின் கிளைமாக்ஸ் -இல் சிறப்பு தோற்றத்தில் தோன்றுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் கதைக்களத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இந்த படம் வருகிறது.
விடுமுறை ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கம் காந்தி ஜெயந்தி
ஏற்கனவே இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.அதே சமயம் படத்திலிருந்து முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
அடுத்ததாக இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் 3D தொழில்நுட்ப பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தரமான 3D மற்றும் VFX ஐ கொண்டுவர படக்குழு செயல்பட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே கங்குவா திரைப்படத்தினை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.3D தொழில்நுட்பத்தில் பணிகள் தீவிரம் சூர்யா நடிக்கும் – ‘கங்குவா’