நாளை ஒரே நாளில் 4 தமிழ் படங்கள் ரிலீஸ்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் நான்கு தமிழ் படங்கள் திரைக்கு வர இருக்கிறது.

நாளை ஒரே நாளில் 4 தமிழ் படங்கள் ரிலீஸ்

 

சந்தானத்தின் ”இங்க நான் தான் கிங்கு”, உரியடி விஜய் குமாரின் ”எலக்சன்”, யாஷிகா ஆனந்த் நடிப்பில் ”படிக்காத பக்கங்கள்”, ”கன்னி” உள்ளிட்ட நான்கு படங்கள் நாளை வெளியாக உள்ளது.

இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு  குறிப்பிடத்தக்க சில படங்கள் வெளியாகி உள்ளன . அதில் இரண்டு வாரதிற்கு முன்பு வெளியான ”அரண்மனை 4” திரைப்படம் பெரிய வெற்றியை பெற்ற இருக்கிறது. இந்தாண்டு வசூல் ரீதியாக முதல் வெற்றிப்படமாக அரண்மனை 4 அமைந்துள்ளது. கவின் நடித்த ஸ்டார் திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்று  நல்ல வசூலையும் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வாரம் எலக்சன், இங்க நான்தான் கிங்கு, படிக்காத பக்கங்கள், கன்னி உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில், நடிகர்கள் சந்தானம், தம்பி ராமையா, பால சரவணன், நடிகை ப்ரியா லயா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘இங்க நான் தான் கிங்கு’.  இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படம் கடந்த வாரமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென தள்ளிவைக்கப்படு இந்த வாரம் வெளியாகிறது. சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி படங்களின் வெற்றிக்குப் பிறகு இப்படம் வெளியாகிறது. இப்படத்தின் புரொமோ காட்சி ஒன்றில் சந்தானம் கெட்டவார்த்தை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நாளை ஒரே நாளில் 4 தமிழ் படங்கள் ரிலீஸ்

சேத்து மான் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் உறியடி விஜயகுமார் நடித்துள்ள படம் எலக்சன். உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் இந்த வாரம் வெளியாகிறது. இது எலக்சன் சீசன் என்பதால் சமீப காலமாக தேர்தல் படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் எலக்சன் படமும் திரைக்கு வருகிறது. இதில் அயோத்தி புகழ் ப்ரீத்தி அஷ்ரானி நாயகியாக நடித்துள்ளார்.

‘படிக்காத பக்கங்கள்’ இயக்குநர் செல்வம் மாதப்பன் இயக்கத்தில்,நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம்.

நாளை ஒரே நாளில் 4 தமிழ் படங்கள் ரிலீஸ்

இந்தப் படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பௌர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் ப்ரஜின், ஜார்ஜ் மரியன், பாலாஜி, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்தும், அதிலிருந்து பெண்கள் எவ்வாறு மீண்டு வர வேண்டும் என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படமும் இந்த வாரம் வெளியாகிறது.

நாளை ஒரே நாளில் 4 தமிழ் படங்கள் ரிலீஸ்

சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி’. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ராஜ்குமார் ,இசை செபாஸ்டியன் சதீஷ். இப்படமும் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Video thumbnail
பனையூரில் விஜய் காரை மறித்து தவெகவினர் போராட்டம்.. காரை நிறுத்தாமல் சென்ற விஜய்!
00:54
Video thumbnail
தனது குருநாதர் கே.பாலசந்தருக்கு மரியாதை செலுத்திய நடிகர் சமுத்திரக்கனி
01:26
Video thumbnail
புத்தகம் என்பது அறிவாயுதம்... பயன்படுத்தாம விட்டா துரு பிடிச்சிரும்
00:47
Video thumbnail
தீரர்கள் கோட்டம் தி.மு.க. - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
01:30
Video thumbnail
"சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ், பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்" - விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
01:26
Video thumbnail
பாஜக சகுனிகளின் கூடாரம்
01:25
Video thumbnail
பொங்கலுக்குள் மாதவரம் ஏரியில் பொதுமக்களுக்கு படகு சவாரி - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
01:20
Video thumbnail
சாலையில் சென்ற பெண் மீது மோதிய ஆட்டோ | சிசிடிவி காட்சி
00:27
Video thumbnail
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
01:37
Video thumbnail
'அரசன்' திரைப்பட படப்பிடிப்புக்கு இடையே மதுரையில் ரசிகர் சந்திப்பு நடத்திய நடிகர் சிம்பு
00:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img