spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கோட் படத்தினை தொடர்ந்து ‘தக் லைஃப்’ படத்தில் நடனமாடும் திரிஷா…புதிய அப்டேட்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்னர் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு இவர் தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்று அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

கோட் படத்தினை தொடர்ந்து ‘தக் லைஃப்’ படத்தில் நடனமாடும் திரிஷா…புதிய அப்டேட்அந்த வகையில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் கலக்கி வருகிறார் திரிஷா. கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் மட்ட பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது மட்டுமல்லாமல் திரிஷாவும் ட்ரெண்டாகி வந்தார். கில்லி படத்தின் அப்படி போடு பாடலுக்கு பிறகு விஜய் – திரிஷா இருவரும் நடனமாடுவதை கண்ட ரசிகர்கள் இந்த பாடலை மிகப்பெரிய அளவில் கொண்டாடினர்.

கோட் படத்தினை தொடர்ந்து ‘தக் லைஃப்’ படத்தில் நடனமாடும் திரிஷா…புதிய அப்டேட்இந்நிலையில் அடுத்ததாக நடிகை திரிஷா, தக் லைஃப் படத்திலும் நடனமாட இருக்கிறார் என புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே மீண்டும் நடிகை திரிஷா நடனமாடுவதை திரையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

கோட் படத்தினை தொடர்ந்து ‘தக் லைஃப்’ படத்தில் நடனமாடும் திரிஷா…புதிய அப்டேட்ஆனால் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடையவில்லை என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன் தனிப்பட்ட காரணத்திற்காக வெளிநாடு செல்ல இருப்பதால் அவருடைய காட்சிகளும் டப்பிங் பணிகளும் நிறைவடைந்து விட்டதாம். இன்னும் சில காட்சிகளும் பாடல்களும் மட்டும் படமாக்கப்பட உள்ளதாம். மீண்டும் இப்படபிடிப்பினை அக்டோபர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாத முதல் வாரத்தில் தொடங்க பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்படம் 2025 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img