‘கூலி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே நடைபெறும்?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

‘கூலி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எங்கே நடைபெறும்?நடிகர் ரஜினி தற்போது வேட்டையன் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது.
அதற்கான வேலைகளும் முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நடிகர் ரஜினி, தனது 171 வது படமான கூலி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரித்து வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.அடுத்த வாரம் விசாகப்பட்டினம் படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என்று சொல்லப்படுகிறது.

அதை தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள் என்றும் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதற்கிடையில் நடிகர் ரஜினி, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
Video thumbnail
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பி ஓடிய இருவர்..
01:32
Video thumbnail
உலகம், மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறது
00:52
Video thumbnail
இஸ்ரேல் - ஈரான் போர் | மூன்றாம் உலகப்போர் வருகிறது | போர் நிறுத்தம் வேண்டும் | Iran-Israel War
10:47
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img