அன்று GST அதிகாரி… இன்று காவல்துறை அதிகாரி என கூறி 1.5 லட்சம் வழிப்பறி செய்த டிப்டாப் நாடக நடிகர் கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அன்ன அக்ராஹாரம் பகுதியில் உள்ள தனியார் (A.B.இன்டஸ்ட்ரிஸ்) நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் முருகன் என்பவர் தான் பணி புரியும் நிறுவனத்தின் சார்பில் சென்னை, திருச்சியில் பணம் வசூல் செய்துவிட்டு மதுரையில் பண வசூல் செய்வதற்காக வந்துள்ளார்.

மதுரையில் போலிஸ் என கூறி 1.5 லட்சம் வழிப்பறி செய்த டிப்டாப் நாடக நடிகரை கைது செய்த காவல்துறை

பண வசூல் செய்வதற்காக கையில் பணப்பையுடன் மதுரை மேலமாசி வீதி கோபாலன் கொத்தன் தெரு பகுதியில் முருகன் நடந்துசென்றபோது அந்த வழியாக வந்த டிப்டாப் நபர் ஒருவர் திடிரென முருகனை வழிமறித்து தான் காவல்துறை அதிகாரி என கூறி கையில் இருக்கும் பையில் என்ன உள்ளது என விசாரித்துள்ளார்.

இதையடுத்து பதற்றத்தில் முருகன் தன்னிடம் 3லட்சத்தி 43ஆயிரம் வசூல் பணம் உள்ளதாக கூறியுள்ளார். அப்போது அதனை கொடு சோதனையிட வேண்டும் என கூறி பையை வாங்கிகொண்டு மீண்டும் முருகனிடம் பையை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சிறிதுதூரம் சென்ற முருகன் பையில் உள்ள பணத்தை எடுத்துபார்த்தபோது பையில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் காணாமல் போனது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த முருகன் திலகர்திடல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மதுரை மாநகர் திடீர்நகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற நாடக நடிகர் தன்னை போலிஸ் என கூறி டிப்டாப்பாக வந்து முருகனை அடித்து மிரட்டி  சோதனை செய்வது போல நடித்து அவர் அணிந்திருந்த வேஷ்டிக்குள் பணகட்டுகளை போட்டு திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ஹரிகிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினர் திருடிய பணம் குறித்து விசாரித்தபோது பணத்தை எல்லாம் செலவு பண்ணிட்டேன் என கூறி தன்னிடம்  5ஆயிரம் ரூபாய் பணம் இருப்பதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து 5ஆயிரத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் போலிஸ் என கூறி 1.5 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட நாடக நடிகர் ஹரிகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட  ஹரிகிருஷ்ணன்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக GST அதிகாரி என கூறி மோசடியில் ஈடுபட்டு கைதானவர் என்பது குறிப்பிடதக்கது.

Video thumbnail
வன்முறையை தூண்டுவதே பாஜகவின் இலக்கு
00:45
Video thumbnail
நீதிமன்றத்தையே மிரட்டும் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ்
00:30
Video thumbnail
நீதிமன்றத்தை மிரட்டும் ஜகதீப் தன்கர்
00:22
Video thumbnail
யார் இந்த குருமூர்த்தி?
00:46
Video thumbnail
செங்கோட்டையன் அரசியல் வாழ்க்கை காலி
00:40
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்..
00:56
Video thumbnail
யார் இவர்கள்? | நீதிமன்றத்தை மிரட்டும் தன்கர் | கவர்னரின் அடாவடி செயல்களை நியாயப்படுத்தும் பாஜகவினர்
10:43
Video thumbnail
தமிழ்நாடு அரசியலை தீர்மானிக்கும் பவர் செக்டார்கள்| காணாமல் போன அரசியல் தலைவர்கள்| குருமூர்த்தி யார்
13:55
Video thumbnail
மாநில சுயாட்சி என்பது எங்களின் உரிமை | ஸ்டாலின் எடுத்து வைத்த முதல் அடி | அலறும் ஒன்றிய அரசு
12:54
Video thumbnail
வட மாநிலங்களின் நிலைமை தமிழ்நாட்டில்... | Tamilnadu | DMK | BJP
00:32
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img