சென்னை திருவொற்றியூரில் ரியல் எஸ்டேட் ஊழியரிடம் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட ரவுடி உட்பட இருவரை கைது செய்த போலீசார்.
சென்னை திருவொற்றியூர் NTO குப்பத்தை சேர்ந்த ஆகாஷ். இவர் ரியல் எஸ்டேட்டில் வேலை செய்து வருகிறார்.இவரது நண்பரான காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரிஷி கண்ணன் என்பவர் ரூபாய் 50,000 பணத்தை ஆகாஷ் என்பவரிடம் வாங்கி வரும்படி காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி தேசப்பன், தருன் அகிய இருவரை அனுப்பி உள்ளார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் ஆகாஷ் வீட்டிற்கு சென்ற ரவுடி தேசப்பன், தருன் ஆகிய இருவரும் ஆகாஷிடம் ரிஷி கண்ணா 50,000 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி வரும்படி கூறியதாக கூறினார்.
பணம் கொடுக்க முடியாது என்று கூறியதால் தேசப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ஆகாஷிடம் மணிபர்ஸ் ,செல்போன் மற்றும் ATM கார்டுகளை பறித்து கொண்டு இருவரும் தப்பி ஒட்டம் பிடித்தனர்.
இது குறித்து ஆகாஷ் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி ஆணையர் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த ரவுடி தேசப்பன், மற்றும் தருன் ஆகிய இருவரை போலீசார் கைதுசெய்து அவரிடமிருந்த மணிபர்ஸ், செல்போன் மற்றும் ATM கார்டுகளை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.