உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கும்பல் கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெஹ்ரான் மருத்துவமனையில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த நபர் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியர்களை ஈரானுக்கு கடத்தியுள்ளார்.உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கும்பல் கைதுகேரளாவின் திருச்சூரில் உள்ள வாலாபாட்டைச் (Valapad)  சேர்ந்தவர் சபித் நாசர் (30).  சபித் நாசர் ஈரானுக்கு இந்தியர்களை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்தியவர்களின் உறுப்புகளை பெறுவதற்காக, டெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

“இந்த மோசடியின் ஒரு பகுதியாக எத்தனை பேர் ஏமாற்றப்பட்டனர் என்பதை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். அவர் ஹைதராபாத்தில் இருந்து ஈரானுக்கு இரண்டு நபர்களை அனுப்பி உள்ளதாகவும்,  அவர்களின் சிறுநீரகங்களை பெற்றதாகவும் தெரியவருகிறது.

சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் இருந்து ஈரான் நாட்டுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆட்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. ஐதராபாத், பெங்களுரு ஆகிய பகுதிகளில் இருந்து பொருளாதார்தில் பின் தங்கியவர்களை கிட்னி தானம் என்று கூறி ஈரான் நாட்டுக்கு அனுப்பப்பட்டது போலீஸ் விசாரனையில் தெரியவந்தது.உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கும்பல் கைதுஇந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட நபர்கள் ஈரான் நாட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்னி எடுக்கப்படுகிறது. அதன் பின் எடுக்கப்பட்ட கிட்னி பொருந்தும் உரிய நபரை தேர்ந்தெடுத்து அவருக்கு கிட்னி பொருத்தப்படுகிறது.

ஒரு கிட்னி ரூ.6 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. கிட்னி எடுத்த பிறகு இருபது நாட்கள் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் இந்தியாவிற்கு  அனுப்பி வைப்பதாகவும் விசாரனையில் தெரியவந்துள்ளது.

சபித் டெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2019 முதல் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். முதன் முதலில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஃபேஸ்புக்  நன்பர் ஒருவர் உதவியுடன் ஜூலை 2019 -ல் இலங்கைக்கு சென்று ரூ 5 லட்சத்திற்கு தனது சொந்த சிறுநீரகத்தை தானம் செய்யதுள்ளார் என்பதும் விசாரனையில் தெரியவந்துள்ளது.உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் கும்பல் கைதுதற்போது அவர் தனது குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக கேரளா வந்துள்ளார். அவரை புலனாய்வுப் பணியகத்தின் கண்காணிப்பின் உதவியுடன் , கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் குடியேற்ற அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை கைது செய்யபட்டுள்ளார்.

திங்கட்கிழமை (மே 20), நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். போலீஸார் அவரை செவ்வாய்க்கிழமை (மே 21) காவலில் எடுத்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.

Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
Video thumbnail
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பி ஓடிய இருவர்..
01:32
Video thumbnail
உலகம், மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறது
00:52
Video thumbnail
இஸ்ரேல் - ஈரான் போர் | மூன்றாம் உலகப்போர் வருகிறது | போர் நிறுத்தம் வேண்டும் | Iran-Israel War
10:47
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img