ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ரவுடி சம்போ செந்திலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறது. ஏற்கனவே கைதான வழக்கறிஞர் ஹரிகரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ரவுடி சம்போ செந்திலுக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சம்போ செந்திலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகே ரவுடி சம்போ செந்தில் பதுங்கி இருப்பதாக தகவலை அடுத்து தனிப்படை போலீசார் நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.