க்ரைம்

ஜாமினில் எடுத்த வக்கீலை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய ரவுடி தடுக்க வந்த மனைவிக்கும் வெட்டு.

வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி, ஜாமினில் வெளியே எடுத்து விட்ட வழக்கறிஞரையும் அவரது மனைவியையும் வீடு தேடி சென்று சரமாரியாக வெட்டிய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகர் சின்னத்திருப்பதி, புதிய குருக்கள் காலனியை சேர்ந்தவர். ஆஷித்கான் (30) இவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவரும் ,இவரது மனைவி பத்மப்பிரியா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்தனர். அப்போது அவரது கட்சிக்காரரான பிரபல ரவுடியான செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஜோசப் என்கிற பாலாஜி(24) வக்கீல் வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் வழக்கறிஞர் ஆசித்கானிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார் . சிறிது நேரத்தில் வழக்கறிஞர் ஆசித்கானுக்கும், ரவுடி பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென வழக்கறிஞரை , ரவுடி பாலஜி தாக்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வக்கீல் மனைவி பத்மபிரியா தடுக்க வந்துள்ளார்.

அவருக்கும் கையில் வெட்டி விழுந்துள்ளது. இதனால் அவர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் தடுக்க ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட ரவுடி பாலாஜி திடீரென தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தார். பின்னர் வழக்கறிஞரையும் அவரது மனைவியையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவம் இடம் சென்று விசாரணை நடத்தினர்.

வழக்கறிஞர் ஆஷித்கான் மற்றும் அவருடைய மனைவி ஆகியோரை வெட்டி விட்டு தப்பிய ரவுடி பாலாஜி மீது நான்கு பிரிவில் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர். ரவுடி பாலாஜி மீது ஏற்கனவே தர்மபுரியில் இரட்டை கொலை வழக்கும், சேலம் ஆட்டையாம்பட்டியில் ஒரு கொலை வழக்கும், செவ்வாய்பேட்டை போலீசில் வழிபறி வழக்கும் நிலுவையில் உள்ளது .

ஒரு முறை குண்டர் தடுப்பு காவலில் பாலாஜியை போலீசார் சிறைக்குள் வைத்தனர். இந்த கொலை வழக்குகளையும் வழிபறி வழக்கையும் வழக்கறிஞர் ஆசித்கான் தான் நடத்தி வந்துள்ளார்.
சிறையில் இருந்த ரவுடி பாலாஜியை ஜாமீனில் வெளியே எடுத்து விட்டுள்ளார். இந்த சூழலில் வழக்கறிஞர் வீட்டுக்கு வந்த ரவுடி பாலாஜி, வழக்கறிஞரிடம் தகராறில் ஈடுபட்டு வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதற்காக வழக்கறிஞரை ரவுடி பாலாஜி வெட்டினார், என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான ரவுடி பாலாஜியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஜாமீனில் வெளியே எடுத்து விட்ட வழக்கறிஞரை பிரபல ரவுடி வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி