தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்வதினால் எந்த சிரமும் இன்றி பொது மக்களின் செல்வதற்காக இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்ககின்றன.
தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபா் 31ம் தெதி கொண்டாடப்படுகிறது . தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து துறை சார்பில் 7810 சிறப்பு பேருந்துகள் உட்பட 14,086 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 28, 29 மற்றும் 30 தேதிகளில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று வழக்கமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன் 2125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கரூர், மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. மேலும், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதேபோல், கோயம்பேட்டிலிருந்தும் வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், ஓசூர் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மேலும், கிழக்கு கடற்கரை சாலையின் வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள், வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…