குமரியில் மாமியாரின் கொடுமையினால் திருமணம் ஆகி ஆறே மாதத்தில் பெண் தற்கொலை செய்துகொண்டாா் . இந்நிலையில் போலீசாரின் கைது நடவடிக்கையால் பயந்த மாமியார் செண்பகவல்லி விஷம் குடித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்தாா். இவருக்கும் கோவை மாவட்டத்தில் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பாபுவின் மகள் சுருதி பாபுவுக்கும் 6 மாதங்களுக்கு முன் திருமணமானது . சுருதி பாபு தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது சுருதியின் மாமியாா் கணவன் அருகே அமர்ந்து சாப்பிடக்கூடாது ,கணவனின் எச்சில் தட்டில் தான் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் கொடுமை செய்தநிலையில் மனதளவில் உடைந்த சுருதி தற்கொலை செய்துகொண்டாா். இறப்பதற்கு முன் தனது தாய்க்கு என் சாவிற்கு மாமியாா் தான் காரணம் என்று ஆடியோ ஒன்றை அனுப்பினாா் . இதைதொடா்ந்து சுருதியின் பெற்றோர் போலீசில் புகாரலித்தனா் . ஆடியோவை அதாரமாக வைத்து போலீஸ் சுருதியின் கணவர் கார்த்திக், மாமியார் செண்பகவல்லி மற்றும் சுருதி பாபுவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனா். இந்நிலையில் போலீசின் கைது நடவடிக்கைக்கு பயந்து அவரது மாமியார் செண்பகவல்லி விஷம் குடித்தாா் . மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி பலியானாா் .