spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

தள்ளிப்போகும் ‘கங்குவா’ ஆடியோ லான்ச் சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தள்ளிப்போகும் ‘கங்குவா’ ஆடியோ லான்ச் சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதன்படி படக்குழுவினர் இந்த படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார்.

3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் படத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் இந்த படத்தின் ட்ரெய்லர் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அடுத்தது இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் இரண்டாவது பாடல் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் எனவும் இதன் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தின் இரண்டாவது பாடல் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ரெபல் ஸ்டார் பிரபாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஆகையினால் வருகின்ற அக்டோபர் 19 அல்லது 20ஆம் தேதி படத்திலிருந்து மிகப்பெரிய அப்டேட் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img